Morning Headlines: முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போட்ட ஃபோன்.. மல்யுத்த கூட்டமைப்பை நடத்த மத்திய அரசு அதிரடி.. இன்றைய முக்கியச் செய்திகள்..
Morning Headlines: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போட்ட போன் கால்! வெள்ள நிவாரண கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை விட இந்த ஆண்டு பெய்த கனமழையால் சென்னை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதாவது, ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பொழிந்துள்ளது. இந்த பேரிடரின் ஈரம் காய்வதற்குள் தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகளுக்கு பின் பெருமழை வெள்ளம் கொட்டித் தீர்த்தது. டிசம்பர் 17,18ஆம் தேதிகளில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல சுழற்சி காரணமாக வரலாற்றில் இல்லாத அளவு மழை கொட்டியது. குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லையில் வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் படிக்க..
- மல்யுத்த கூட்டமைப்பை நடத்த மத்திய அரசு அதிரடி.. இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு பறந்த கடிதம்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்த வந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மேற்கொண்ட போராட்டம் பெரும் அதிர்வலைகளை கிளப்பின. பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள், இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷன் சிங், அவரது குடும்ப உறுப்பினர் யாரும் மல்யுத்த கூட்டமைப்பில் எந்த பதவியையும் வகிக்கக் கூடாது என்றும் மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தினர். மேலும் படிக்க..
- அதிதீவிரமாக பரவும் புதிய கொரோனா ஜேஎன்.1 வேரியண்ட்- பாதிப்பு என்ன? எச்சரிக்கும் எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர்
கொரோனா ஜேஎன்.1 வேரியண்ட் அதிதீவிரமாக பரவினாலும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். கொரோனா ஜேஎன்.1 வேரியண்ட் தொடர்பாக பேசியுள்ள எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரந்தீப் குலேரியா, “புதிய கொரோனா வேரியண்டான JN.1 மிகவும் வேகமாக பரவுகிறது. அதிக நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. ஆனாலும் கடுமையான நோய்த்தொற்றுகள் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது போன்ற சூழலை ஏற்படுத்தவில்லை. இந்த வேரியண்ட் படிப்படியாக ஆதிக்கம் செலுத்துகிறது. பெரும்பாலும், காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல்வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. மேலும் படிக்க..
- இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் என்ன? நிலவிற்கு மனிதன் - விண்வெளி மையம் வரை - சோம்நாத் தகவல்
இந்திய விண்வெளி வீரர் ஒருவரை 2040ம் ஆண்டிற்குள் நிலவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். விண்வெளி ஆராய்ச்சி பணியில் இந்திய பல்வேறு புதிய புதிய சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை செய்திடாத சாதனையாக நிலவின் தென்துருவத்திற்கு மிக அருகாமையில், சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் உலக நாடுகளை வியக்கச் செய்துள்ளது. அதைதொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்-1 விண்கலமும் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தான், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை, அதன் தலைவரான சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..