Morning Headlines: சபரிமலைக்கு ரெட் அலர்ட்; பள்ளிகளுக்கு விடுமுறை - இன்றைய முக்கியச் செய்திகள்
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- பக்தர்கள் கவனத்திற்கு.. கேரளாவில் தொடரும் கனமழை.. சபரிமலைக்கு ரெட் அலர்ட்!
சபரிமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் ஐயப்ப பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கேரளாவில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. மேலும் படிக்க..
- நீலகிரி மலை ரயில் சேவை வரும் 25 ம் தேதி வரை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரெயில் சேவை வருகின்ற 25 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் படிக்க..
- கோவை: கனமழை காரணமாக காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட 193 பள்ளிகளுக்கு விடுமுறை!
வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் படிக்க..
- தொடரும் கனமழை.. 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா?
கன மழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 23) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் இலேசான மழை முதல் கன மழை வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கன மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க..
- தொடர் சர்ச்சையை கிளப்பும் டீப் ஃபேக்.. ஜி20 உச்சி மாநாட்டில் பிரச்னையை கையில் எடுத்த பிரதமர் மோடி
சமீப காலமாகவே, டீப் ஃபேக் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக, பிரபலமான பெண்களின் புகைப்படங்களை எடிட் செய்து ஆபாசமான புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மெய்நிகர் G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, டீப் பேக் விவகாரம் பெரும் கவலை அளிப்பதாகவும் சமூகத்துக்கு ஏஐ தொழில்நுட்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..