Morning Headlines: அய்யப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தொடரும் மழை! இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள்!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
-
உடல்நிலை பிரச்சினைகளும், வாழ்க்கை முறைகளுமே இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு காரணம்
கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது. இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் இருக்கும் தொடர்பு குறித்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதில் உடல்நிலை பிரச்சினைகளும், வாழ்க்கை முறைகளுமே இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- ஐய்யப்ப பக்தர்களே! இனி விமானத்திலும் இரு முடியுடன் பயணிக்க அனுமதி
சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் தங்கள் இருமுடிகளுடன் உள்ளிட்ட பூஜை பொருட்களுடன் வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை செல்ல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.கடந்த முறை ஜனவரி 20ஆம் தேதிவரை இந்த விதித் தளர்வுகள் நடைமுறையில் இருந்தது. இது பக்தர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்டலம்-மகரவிளக்கு சீசனில் ஜனவரி 15, 2024 வரை எக்ஸ்ரே, இடிடி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தும் உடல் பரிசோதனைக்குப் பிறகு பக்தர்கள் தேங்காய் மற்றும் நெய்யுடன் இருமுடிகளை எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது. மேலும் படிக்க
- தொடரும் மழை.. புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வேலைக்கு செல்லும் நபர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவியர்கள், அத்தியாவசியத்தை நம்பி உழைக்கும் மக்கள் என பலரும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனிடையே புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- கார்த்திகை தீபம் 2023! மலையேறும் பக்தர்களுக்கு நிபந்தனைகள் - முழு விவரம் இதோ!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நவம்பர் மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழா 26 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனிடையே திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளில் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவது தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் படிக்க
- இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே முதல் முறையாக டி20 தொடர்! வெளியான அட்டவணை - எப்போது தெரியுமா?
2024 ஜனவரியில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா நடத்துகிறது. தொடரின் முதல் டி20 போட்டி ஜனவரி 11ம் தேதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டி ஜனவரி 14 மற்றும் ஜனவரி 17ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க