Morning Headlines: மருத்துவமனையில் மமதா பானர்ஜி.. திருப்பதியில் எழுந்த டீ கப் சர்ச்சை.. நாட்டின் முக்கிய நிகழ்வுகள் இதோ..!
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு.. 10 புதிய எம்.பிக்கள் யார்? நாடாளுமன்றத்தில் பாஜக கை ஓங்குமா?
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநிலங்களைவைக்கு புதியதாக 10 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தல் ஜுலை 24ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல் மேற்கு வங்கத்தில் காலியான நாடாளுமன்ற தொகுதிக்கும் ஜுலை 24ம் தேதியே இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக ஜுலை 13ம் தேதியும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியாக ஜுலை 17ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- டீ கப்பில் சிலுவை சின்னம்: கடைக்கு சீல்வைத்த திருப்பதி தேவஸ்தானம்!
உலகப்புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோவிலில் இந்து மதத்தை தவிர வேற்று மத பிரச்சாரம், வேற்று மத வழிபாடு, வேற்று மத குறியீடுகளுடன் கூடிய பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு வழங்கப்பட்டடீ கப்பில் சிலுவை குறியீடு இருந்ததால், டீ விற்பனை செய்த கடையை அடைத்து விளக்கம் அளிக்க தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஆனால், அது சிலுவை குறியீடு இல்லை என்றும் பலர் தெரிவிக்கின்றனர். மேலும் படிக்க
-
திடீரென தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. மருத்துவமனையில் மம்தா பானர்ஜி, வலியால் அவதி
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜூலை 8ம் தேதி அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக மமதா பானர்ஜி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பாக்டோக்ரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
- 62 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிசயம்.. குறைவாக பதிவான பருவமழை..
தென்மேற்கு பருவ மழை பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை கொடுப்பது தென்மேற்கு பருவ மழைதான்.இந்த ஆண்டு புவி வெப்பமயமாதல் காரணமாக எல் நினோ நிகழ்வு இருக்கும் என்பதால் மழையின் அளவு சராசரி அளவை விட குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி இதுவரை மழை இயல்பை விட 23% குறைவாகவே பதிவாகியுள்ளது. மேலும் படிக்க
- ஒரே நாளில் 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் 4 நாட்கள் அமெரிக்கா மற்றும் எகிப்திற்கு பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் நாடு திரும்பினார். இதனை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் 5 புதிய வழிதடங்களில் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க