மேலும் அறிய

Vande Bharat: ஒரே நாளில் 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..

மத்திய பிரதேசத்தில் 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் 4 நாள் அமெரிக்கா மற்றும் எகிப்திற்கு பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் நாடு திரும்பினார். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் 5 புதிய வழிதடங்களில் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

டெல்லியில் இருந்து புறப்பட்டு கான்பூர் – அலகாபாத் வழியாக வாரணாசி வரையில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இதுபோன்று நாடு முழுவதும் 17 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

இன்று காலை 10.30 மணியளவில் ராணி கமலாபதி ரயில் நிலையத்திற்கு வந்த பிரதமர், ஐந்து வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராணி கமலாபதி - ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கஜுராஹோ - போபால் - இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மட்கான் (கோவா) - மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; தார்வாட் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஹதியா - பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ஐந்து ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டது.

மக்களின் பயன்பாட்டிற்காக அதி விரைவு ரயிலான வந்தே பாரத் ரயில் சேவை நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. நாட்டின் 18வது வந்தே பாரத் ரயில் சேவையாக அசாம் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கேரள மாநிலத்திலும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. ஒருபுறம் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டாலும் வந்தே பாரத் ரயில் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் புதிதாக 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

புஷ்கர் திருவிழா - ரூ. 21 கோடி மதிப்பிலான குதிரை முதல் 1500 கிலோ எடை கொண்ட எருமை வரை
புஷ்கர் திருவிழா - ரூ. 21 கோடி மதிப்பிலான குதிரை முதல் 1500 கிலோ எடை கொண்ட எருமை வரை அணிவகுப்பு
School Holiday: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் அக்வான் புயல்! 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
School Holiday: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் அக்வான் புயல்! 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
ஓராண்டுக்கு CHAT GPT PLUS சேவை இலவசம்! - யார் யாருக்கு சலுகை? ஓபன் ஏஐ வெளியிட்ட அசத்தல் ஆபர் என்ன?
கரண்ட் பில் கட்டவில்லை என போன் வருகிறதா? உஷார்! SBI வெளியிட்ட மோசடி எச்சரிக்கை!
கரண்ட் பில் கட்டவில்லை என போன் வருகிறதா? உஷார்! SBI வெளியிட்ட மோசடி எச்சரிக்கை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாய் திறப்பீர்களா டம்மி டாடி?" திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி; மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
MK Stalin:
MK Stalin: "அணையைக் கூட திறக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் வாயை யாராலும் திறக்க முடியவில்லை"! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
"ஆதார் கார்டு முகவரியால் அம்பலமான வழக்கறிஞரின் லீலைகள்" பெண்ணிடம் ரூ.21 லட்சம் அபேஸ்
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
Madurai Bike Race:
Madurai Bike Race: "நான் மோசமான ஆளு" கானா பாட்டுப் போட்டு பைக் ரேஸ்.. எல்லை மீறும் இளம்பெண்கள்.. தட்டித் தூக்குமா போலீஸ்?
Guru Peyarchi: 3 முறை குரு பெயர்ச்சி.. எப்போது தெரியுமா? கோடீஸ்வர யோகம் யாருக்கு? உஷாராக இருக்க வேண்டியது யார்?
Guru Peyarchi: 3 முறை குரு பெயர்ச்சி.. எப்போது தெரியுமா? கோடீஸ்வர யோகம் யாருக்கு? உஷாராக இருக்க வேண்டியது யார்?
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

Embed widget