Morning Headlines: தெலங்கானாவில் கொத்தாக சிக்கிய பணம்.. சிக்கலில் பிரகாஷ்ராஜ்.. இன்றைய முக்கிய செய்திகள்..
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- கத்தை, கத்தையாய் சிக்கிய பணம் - எத்தனை கோடிகள் தெரியுமா? என்ன நடக்கிறது தெலங்கானாவில்?
தெலங்கானாவில் தேர்தலையொட்டி நடைபெற்ற வாகன சோதனையில், கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளன.தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வருகிறது. இதனால் ஒருபுறம் பரப்புரை அனல் பறக்க, மறுபுறம் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான பணப் பரிமாற்றமும் மும்முரமாக நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிர வாகன சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- "டீப் ஃபேக் விவகாரத்தை எதிர்கொள்ள புதிய சட்டம்" மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி
சமீபகாலமாக பிரபலமான பெண்களின் புகைப்படங்களை எடிட் செய்து ஆபாசமான புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.டீப் ஃபேக் விவகாரம் தொடர்பாக சமூக ஊடக நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனை நடத்தினார். இதில் இத்தகைய சம்பவங்களை தடுக்க ஏற்கனவே உள்ள கட்டமைப்பை மாற்றுவது அல்லது புதிய விதிகள் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை பெறப்பட்டது. மேலும் படிக்க
- அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் சிக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் - சம்மன் அனுப்பி செக்!
ப்ரணவ் ஜுவல்லர்ஸ் பண மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் பிரகாஷ் ராஜிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ப்ரணவ் ஜுவல்லர்ஸ் சுமார் 100 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரகாஷ்ராஜ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- 'பாவம் செய்தவர்கள் பார்க்கப் போனதால் இந்தியா தோல்வி' - மம்தா பானர்ஜி கடும் காட்டம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது சராமாரியான விமர்சனங்களை அள்ளி வீசியுள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பையில் "பாவம் செய்தவர்கள்" கலந்து கொண்ட இறுதிப் போட்டியைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது எனக் கூறியுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
-
பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை ரேஷன் கடைகள் இயங்காது..!
தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 25) ரேஷன் கடைகள் இயங்காது என்பதால் பொதுமக்கள் இன்று பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை கடந்த நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் நவம்பர் 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நவம்பர் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறையின்றி ரேஷன் கடைகள் இயங்கியது. மேலும் படிக்க