Morning Headlines: பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி.. பாஜகவினருக்கு தமிழ்நாடு அரசால் பிரச்சனையா? இன்றைய முக்கியச் செய்திகள்..
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- பா.ஜ.கவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! – ஒரு பக்கத்துக்கு விளக்கம்..
பா.ஜ.க.-வில் இருந்து விலகுவதாக நடிகை கெளதமி அறிவித்துள்ளார். மிகுந்த வேதனையுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு X தளத்தில் அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மிகுந்த வேதனையுடன் விலகுவதாக அறிவித்துள்ள கெளதமி, நில அபகரிப்பு வழக்கில் அவர் புகாரளித்துள்ள சி.அழகப்பன் என்பவருக்கு பா.ஜ.க. கட்சி ஆதரவு அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க..
வாய் சவடால்.. இதெல்லாம் பழனிசாமி போட்ட திட்டமா? கேள்விகளை அடுக்கி சரவெடியாய் வெடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..
திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் வட தமிழகத்தை உள்ளடக்கிய திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சார்ந்த 13 கட்சி மாவட்டங்களை உள்ளடக்கிய 15000 வாக்குச்சாவடி பாக முகவர்கள் கலந்து கொள்ளும் பயிற்சி பாசறை கூட்டம் திருவண்ணாமலை அருணாசலம் நகரில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு கழக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார். மேலும் படிக்க..
- பாஜகவினருக்கு தமிழ்நாடு அரசால் பிரச்சனையா? வெகுண்டெழுந்த பாஜக மேலிடம்..
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இன்னும் 5 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் படிக்க..
- பாதுகாப்பு படைகளா? பாஜகவின் அரசியல் ஊழியர்களா? – பாஜகவை சாடும் காங்கிரஸ் தலைவர் கார்கே..
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இன்னும் 5 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, பாஜக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. மேலும் படிக்க..
- தெலங்கானாவில் கைக்கொடுக்குமா வடமாநில பார்முலா? பாஜக கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்..
தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர வேறு எங்கும் ஆட்சி அமைத்திராத பாஜக, தன்னுடைய அடுத்த குறியை தெலங்கானா மீது வைத்துள்ளது. கடந்த மே மாதம் நடந்த தேர்தலில், கர்நாடாகாவில் ஆட்சியை பறி கொடுத்த பாஜக தெலங்கானாவில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கும் பல முயற்சிகளை செய்து வருகிறது. அதே சமயம், ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. மேலும் படிக்க..
- உயிர் காக்கும் மருந்துகள்.. பாலஸ்தீனியர்களுக்கு ஓடோடி சென்று உதவிய இந்தியா..
பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் உலக அளவில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் படிக்க..