Goa : சம்மர் ஹாலிடேஸ் வரப்போகுது.. கோவா ப்ளானை நிஜமாக்குங்க.. இந்த இடங்கள்ல கலக்குங்க..
கோடை விடுமுறை நெருங்குவதால் எல்லோருக்குமே அவரவர் வசதிக்கேற்ப சுற்றுலா திட்டங்கள் இருக்கும். அந்த வகையில் கொஞ்சம் செலவழித்து வெளிமாநில லாங் ட்ரிப் ப்ளான் பண்றவங்களுக்கு கோவா சிறந்த இடம்.
கோடை விடுமுறை நெருங்குவதால் எல்லோருக்குமே அவரவர் வசதிக்கேற்ப சுற்றுலா திட்டங்கள் இருக்கும். அந்த வகையில் கொஞ்சம் செலவழித்து வெளிமாநில லாங் ட்ரிப் ப்ளான் பண்றவங்களுக்கு கோவா சிறந்த இடம்.
பொதுவாக கோவாவின் கடலோரப் பகுதிகளில் சுற்றுலா கவனம் பெற்றுள்ளது. உள்நாட்டில் சுற்றுலாவானது குறைந்த அளவிலான செயல்பாட்டையே கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில், 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது, அவர்களில் சுமார் 1.2 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
கோவாவானது இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாக பிரிட்டிஷ்காரர்கள் மற்றும் ரசியர்கள், விருந்துக்கு குறைந்த வசதிகளுடன், தேர்ந்தெடுக்க விரும்பும் இடமாக இருந்து வருகிறது. மேலும் உயர் அடுக்கு மக்கள் தொகையை ஈர்க்கும் வகையில் மாற்றங்கள் செய்யலாம் என அரசு விரும்புகிறது. அதன்படியே தற்போது பல்வேறு மாற்றங்களும் அமலுக்குக் கொண்டு வரப்படுகின்றன.
கோவா சென்றால் தவறவிடாமல் பார்க்க வேண்டிய இடங்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அவர் லேடி சர்ச்: The Our Lady of the Immaculate Conception Church என்ற இந்த தேவாலயம் முதன்முதலில் 1541 ஆன் ஆண்டு கட்டப்பட்டது. போர்ச்சுகீசிய மாலுமிகள் தான் இந்தனைக் கட்டியுள்ளனர். அதனால் இந்தக் கட்டடம் போர்ச்சுகீஸிய பரோக் ஸ்டைலில் இருக்கிறது. இந்த தேவாலயம் இந்திய சினிமாக்கள் பலற்றிலும் இடம் பெற்றிருக்கும்.
போம் ஜீசஸ் தேவாலயம்: 1605 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த போம் ஜிசஸ் தேவாலயம். உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயத்தில் தான் புனித சேவியர் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கோவா கோட்டை:
வடக்கு கோவாவில் அரேபியக் கடல் முட்டும் இடத்தில் இந்த கோட்டை அமைந்திருக்கிறது. சூரிய உதயம், மறைவைப் பார்க்க இதை விட அழகான இடம் கிடைப்பது கடினம். மேலும் கோட்டையிலிருந்து கீழிறங்கும் பாதைகள் சுற்றிலும் இருக்கும் அழகை கண்டு ரசிக்க வகை செய்கின்றன. சிங்க்வரிம் கடற்கரையை இரண்டாய்ப் பிரிக்கும் இந்த கோட்டை நகரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து பார்க்கக் கிடைக்கும் கடலின் முகங்கள் அரிது. கோவாவின் அழகிய அமைப்பைப் பார்க்க விரும்பினால் இந்த கோட்டைக்கு செல்ல வேண்டும். ஏனெனில், இது அமைந்திருக்கும் இடம் அப்படி. அளவில் சிறிய கோட்டையாய் இது இருந்தாலும் இது தரும் பார்வை அதற்கு ஈடு செய்கிறது. குவரிம் கரையிலிருந்து படகில் சென்றுதான் இந்த கோட்டையை அணுக முடியும். திரகோல் நதியை ஒட்டி இதன் மதில் தொடங்கும்.
இது தற்போது ஒரு உணவகமாக மாற்றப்பட்டிருக்கிறது. கோவாவின் பிரபலமான இந்த கோட்டையின் பெருமை இதன் கலங்கரை விளக்கம். இப்போது பயன்பாட்டில் இல்லாத இந்த கலங்கரை விளக்கத்தின் உயரம் நான்கு மாடிகள். கோவாவில் போர்த்துக்கீசிய கட்டமைப்பில் இல்லாமல் மராத்திய கட்டிடக் கலையமைப்பில் இருக்கும் ஒரே கோட்டை இது. தோட்டங்கள், அருகிலேயே பட்டாம்பூச்சி காட்சியகம் இருக்கும் இடம் இது. இப்போது இங்கு சிதிலங்கள் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. ஆதலால், வரலாற்று ஆர்வலர்கள் தவிர்க்க முடியாத இடம் ஆகியிருக்கிறது. சிறிது காலத்திற்கு இது சிறைச்சாலையாக இருந்திருக்கிறது. இப்போது அமைதியான இடத்தில், அற்புதமான காட்சியுடன் கடலின் கரையில் அமர்ந்திருக்கிறது. இவையெல்லாம் நீங்கள் நிச்சயமாக தவறவிடாமல் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
வாகடார் கடற்கரை:
வாகடார் கடற்கரை என்பது கோவா சுற்றுலாதலங்களில் மிகவும் பிரபலமான சுற்றுலாதலங்களில் ஒன்று. இந்த இடம் பார்ட்டி கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்றது. இங்கே ஆண்டு முழுவதும் இசைத் திருவிழாக்கள் நடைபெறும். இரவு வாழ்க்கை இங்கே பரபரப்பாக கொண்டாட்டமாக இருக்கும்.
ரேஸ் மாகோஸ் கோட்டை:
ரேஸ் மாகோஸ் கோட்டை 1551 ஆம் ஆண்டு போர்ச்சுகீஸியர்களால் கட்டப்பட்டது. 1993 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது புழக்கத்தில் இல்லாமல் போனது. பெருமைமிகு கட்டிட கலைஞர் ஜெரார்ட் டா குன்ஹா இதனை மறுசீரமைக்கும் பொருட்டு குத்தகைக்கு எடுத்துள்ளார்.