மேலும் அறிய
Top 10 News Headlines: அதிமுக தேர்தல் வியூகம், மீண்டும் இந்தியா-பாக். குறித்து பேசிய ட்ரம்ப், இன்றும் தெரியும் சூப்பர் மூன் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Oct. 7th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- சென்னை ராயப்பேட்டையில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
- தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்க, இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.
- கரூர் துயர சம்பவத்தை வைத்து யாரும் அரசியல் செய் வேண்டாம் என மநீம தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முன்ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.11,200-க்கும், ஒரு சவரன் ரூ.89,600-க்கும் விற்பனையாகிறது.
- தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
- திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 3,000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்.
- தலைமை நீதிபதி மீதான தாக்குதல், நீதித்துறையின் மாண்பின் மீதான தாக்குதல் மட்டுமின்றி, அரசமைப்பின் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி கண்டனம்.
- பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் உறுதி. நவ. 9, 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கும் நிலையில், 9-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறியுள்ளார்.
- நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60-ஐ தாண்டியது.
- வரி விதிக்கும் அதிகாரம் மட்டும் தன்னிடம் இல்லாமல் இருந்திருந்தால், உலகில் இந்நேரம் 4 பேர்கள் நடந்திருக்கும் என கூறியுள்ள ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு.
- இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நேற்று தெரிந்த நிலையில், இன்றும் அதை காணலாம் என வானியல் ஆய்வாளர்கள் தகவல். சந்திரன் வழக்கத்தைவிட 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தெரியும்.
- இன்ஸ்டாகிராமில் லைவ் லொகேஷனை பகிரும் வசதி இந்தியாவில் அறிமுகமானது. ஸ்நாப்சாட் போல நண்பர்களின் லொகேஷனை பார்க்கலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















