Top 10 News Headlines: அதிமுகவினருக்கு ரத்த அழுத்தமா? ”தேர்தலில் போட்டியிடமாட்டேன்” ஷமி அட்டாக் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Oct 16th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

அதிமுகவினரை கிண்டல் செய்த சபாநாயகர்
கரூர் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசின் செயல்பாட்டை கண்டித்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். இதை பார்த்து, “அதிமுகவினர் கருப்புப்பட்டை அணிந்துவந்த நிலையில் ரத்த அழுத்தம் உள்ளதா?” என சபாநாயகர் அப்பாவு கிண்டலடித்துள்ளார்.
மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அக்டோபர் 15 முதல் 21 வரை 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என கணிப்பு
ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்
தீபாவளியை முன்னிட்டு, அக்.17,18,21,22 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் - தாம்பரம் மாநகர காவல் அறிவிப்பு கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்கள் வெளியீடு.
20 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்த சோகம். ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி சென்ற இந்த பேருந்தில் 57 பேர் பயணித்துள்ளனர். 20 பேர் உயிரிழந்த நிலையில் 15 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
”தேர்தலில் போட்டியிடமாட்டேன்”
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை. இம்முடிவு என் அரசியல் பயணத்தின் நன்மைக்காக எடுக்கப்பட்டது. இருப்பினும், ஜன் சுராஜ் கட்சி மூலம் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வேன் - ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
“வாட்ஸ்அப் இல்லனா, இதை யூஸ் பண்ணுங்க' - உச்சநீதிமன்றம்
வாட்ஸ்-அப் அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில், 'வாட்ஸ்அப் பயன்பாடு அடிப்படை உரிமை அல்ல, உள்நாட்டு தயாரிப்பான Zoho-வின் அரட்டை செயலியை பயன்படுத்துங்கள்' என கூறி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம். தனது வாட்ஸ்அப் கணக்கு முடக்கம் அடிப்படை உரிமை மீறல், இத்தடையை நீக்குமாறு உத்தரவிடக் கோரி பெண் மருத்துவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
ஆவணங்கள் பதுக்கல் - இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர் ஆவார்.
சீனா செய்தது சரியல்ல - இந்தியாவின் ஆதரவு கோரும் அமெரிக்கா
“சீனாவின் கனிம வளங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆத்திரமூட்டுகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க இந்தியா, ஐரோப்பா போன்ற ஆதரவு நாடுகளுடன் ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம்” -அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் பேச்சு
கோலி கோரிக்கைக்கு குரல் கொடுத்த அஸ்வின்
இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளுக்கென 5 டெஸ்ட் மையங்களை நிறுவுதல் தொடர்பாக நீண்ட நாட்கள் முன்பு விராட் வைத்த கோரிக்கையை தற்போது மீண்டும் முன் வைத்துள்ளார் இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் அந்த 5 மைதானங்களில் மட்டுமே நடத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள BCCI-யிடம் கோரிக்கை
அகர்கருக்கு ஷமி பதிலடி
“என்னைப் பற்றிய அப்டேட் தேவை என்றால் அவர்கள்தான் கேட்க வேண்டும்.
யாருமே என்னிடம் கேட்காதபோது நானாகப் போய் அப்டேட் சொல்ல முடியாது. சாம்பியன்ஸ் ட்ராஃபி, ஐபிஎல், துலீப் ட்ராஃபி என தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டும், பயிற்சி செய்து கொண்டும்தான் இருக்கிறேன்” - ஷமி குறித்து எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை என இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அகர்கர் கூறியதற்கு முகமது ஷமி பதிலடி




















