(Source: Poll of Polls)
Top 10 News Headlines: தவெக ஹாப்பி, வெள்ளி விலை புதிய உச்சம், தீவிர சைபர் தாக்குதல் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Oct 13th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

சிபிஐ விசாரணை உத்தரவு
கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு. விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைப்பு.
வெள்ளி விலை புதிய உச்சம்
ஒரு கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.195க்கு விற்பனை வெள்ளி விலை கிலோ ரூ.5,000 உயர்ந்து (ரூ.1,95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, 92 ஆயிரத்து 200 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெருங்கும் தீபாவளி: களைகட்டும் விற்பனை
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், கடை வீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம். வார விடுமுறையையொட்டி நேற்று தமிழகத்தின் முக்கிய வணிக வீதிகளில் புத்தாடை, பட்டாசு, வீட்டு உபயோக பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது
அவசரம் வேண்டாம் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
“சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அரசு அவசரம் காட்டக்கூடாது. காலங்காலமாக இருக்கும் பெயர்களை நீக்குவது தமிழ்நாடு மக்கள் இடத்தில் குழப்பங்கள், முரண்பாடுகளை ஏற்படுத்தும். சமூக அடையாளத்துடனான ஊர்கள், தெருக்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அந்தந்த பகுதி மக்களின் கருத்தறிந்து அரசு செயல்பட வேண்டும்” - ராமதாஸ்
மீனவர்கள் கோரிக்கை
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 3வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம். 800-க்கும் மேற்பட்ட விசைப்பகுகள் நங்கூரமிட்டு நிறுத்தம். மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை.
தீவிர சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பங்குச் சந்தை
"தேசிய பங்குச் சந்தை (NSE) தினமும் சுமார் 17 கோடி சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறது. தடையற்ற பங்கு வர்த்தகங்களை உறுதி செய்ய சைபர் போர்வீரர்களாக ஒரு தொழில்நுட்ப நிபுணர்க் குழு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, தேசிய பங்குச் சந்தை ஒரே நாளில் 40 கோடி சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டது” - தேசிய பங்குச் சந்தையின் உயர் அதிகாரிகள் தெரிவிப்பு.
பாக்., - ஆப்., போரையும் நிறுத்துவேன் - ட்ரம்ப்
“போர்களைத் தீர்ப்பதில் சிறந்தவன் நான். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நடப்பதாக கேள்விப்பட்டேன். மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியதும், அதையும் நிறுத்துவேன். காசா போர் என்பது நான் தீர்த்து வைத்த 8வது போராகும்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
காஸாவில் உள்ளூர் மோதல்
காசாவில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுவான Doghmushக்கு இடையே நடந்த புதிய மோதலில் பிரபல பாலஸ்தீன பத்திரிகையாளர் சலே அல்ஜஃபராவி உட்பட 27 பேர் உயிரிழப்பு.
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், அதை மோசமாக்க இஸ்ரேலிய ஆதரவு குழுக்கள் முயற்சி என ஹமாஸ் குற்றச்சாட்டு.
இந்திய அணி தொடர் தோல்வி
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி தோல்வியுற்றது. இந்த தொடரில் இந்திய அணி பெறும் இரண்டாவது தோல்வி ஆகும். மீதமுள்ள 3 லீக் போட்டிகளில் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது வெற்றி பெற்றால் தான், எந்தவித சிக்கலும் இன்றி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
போராடும் மேற்கிந்திய தீவுகள் அணி
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜான் கேம்பெல் சதமடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். 52 ரன்கள் பின் தங்கிய நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க அந்த அணி போராடி வருகிறது.





















