மேலும் அறிய
Top 10 News Headlines: கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை, ட்ரம்ப்பை மீறி செயல்படும் ஈரான், WC ODI-மகளிர் அணி சாதனை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Nov. 3rd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு தடை விதிக்கக் போரி உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்கிறது திமுக. நேற்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று நடவடிக்கை.
- SIR-காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, சிபிஐ அதிகாரிகள் இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் கட்சி அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,800-க்கும், கிராமிற்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,350-க்கும் விற்பனை.
- கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை. தப்பியோடிய 3 இளைஞர்களை தேடும் காவல்துறையினர்.
- ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மட்டுமல்ல, காங்கிரஸ் அரச குடும்பத்தினர் தூக்கத்தை இழந்தனர் என பிரதமர் மோடி விமர்சனம். பீகாரில் ஆர்ஜேடி, காங்கிரசுக்கு 2 குடும்பங்களை பற்றி மட்டும் தான் கவலை எனவும் குற்றச்சாட்டு.
- பீகாரில் இண்டியா கூட்டணி ஆட்சியமைத்தால், பல சமூகங்களுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உறுதி.
- தெலங்கானாவில் மிரியால குடா அருகே அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு.
- நேற்று சிஎம்எஸ் 03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், எல்விஎம்-3 ராக்கெட்டின் வெற்றி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான், சந்திராயன்-4 திட்டங்களுக்கும் உந்துதலாக இருக்கும் என இஸ்ரோ நம்பிக்கை.
- ஆப்கானிஸ்தானில் இந்துகுஸ் பிராந்தியத்தில் நள்ளிரவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்.
- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் எச்சரிக்கையையும் மீறி, அணுசக்தி நிலையங்களை மீண்டும் கட்டமைக்க ஈரான் முடிவு. முன்பை காட்டிலும் அதிக வலிமையுடன் கட்டமைக்கப்படும் என அதிபர் மசூத் உறுதி.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டும், பரிசு மழையும் குவிந்து வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















