மேலும் அறிய
Top 10 News Headlines: SIR பற்றி முதல்வர் விமர்சனம்.. பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.. இதுவரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 News Headlines Today November 10: நவம்பர் 10ம் தேதியான இன்று காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

முக்கிய செய்திகள்
Source : ABPLIVE AI
- வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்க்க அதிமுகவுக்கு தைரியமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக தொடர்ந்த வழக்கில் அதிமுக தன்னை இணைத்தது கபட நாடகம் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி செல்பவர்கள் இன்று (நவம்பர் 10) முன்பதிவு செய்ய முடியும். ஜனவரி 10 ஆம் தேதி செல்பவர்கள் நாளை (நவம்பர் 11) முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880ம், கிராமுக்கு ரூ. 110ம் உயர்ந்துள்ளது. அதன்படி சவரன் ரூ.91,280, கிராம் ரூ. 11,410 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் நிலையில் இன்று முதல் மாதிரி முன்னோட்ட பணிகள் தொடங்குகிறது. நவம்பர் 30ம் தேதி வரை மொபைல் செயலிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எனது நடைப்பயணத்தின் மூலம் நிறைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். உரிமை காக்க தலைமுறை மீட்க நடைப்பயணத்தின் 100வது நாள் விழாவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
- அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் இன்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன்மூலம் சமாதான தீர்வு எட்டப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெண் பயணியிடல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ரேபிடோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- பீகார் மாநிலத்தின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 11) நடைபெறவுள்ளது. 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
- பிறநாடுகளிடம் இருந்து பெறப்படும் வரிகளில் ஒரு பங்கை அமெரிக்க மக்களுக்கு வழங்கவுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி இந்திய மதிப்பில் ரூ. 1.75 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- மலேசியா - தாய்லாந்து எல்லை அருகே மியான்மரில் இருந்து புறப்பட்ட படகு கடலில் மூழ்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 300க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததில் 100 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு பரிமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சென்னை அணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ண் ஆகியோரை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















