Top 10 News Headlines: நீட் தேர்வு முதல் கத்திரி வெயில் வரை.. டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today May 3: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

நீட் தேர்வு:
நீட் நுழைவுத் தேர்வு இன்று (மே 04) நாடு முழுவதும் நடைபெறுகிறது நாடு முழுவதும் சுமார் 23 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் தமிழ்நாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் பேரும் நீட் தேர்வை எழுத உள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
இந்த நீட் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்:
"முதல்வர் ஆகி, திட்டங்களை நிறைவேற்றினால், ஆஃப்ட்ரால் ஒன்றிய அரசின் ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டிருக்க கூடிய தற்காலிகமாக தங்கியிருக்க கூடிய ஆளுநர் ஒருவரால் தடுத்த நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடுகிற வாக்குக்கு என்ன மரியாதை. ஆளுநர் பதவி என்பது எந்த பதவி இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட். ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவது அரசு, வசதிகளை செய்து தருவது அரசு. ஆனால், உங்களை நிர்வகிக்கும் துணை வேந்தர்களை நியமிப்பது ஆளுநர் என்றால் என்ன நியாயம்" என முதலமைச்சர் ஸ்டாலின் கல்வியாளர்கள் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு:
பகுத்தறிவு என்ற பெயரில் ஆன்மீகம் அறிவியல் பூர்வமானதாக இல்லை எனக்கூறி அதை சிலர் அழிக்க நினைப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சனாதன தர்மமே ஆன்மீகத்தின் அடையாளம் என்றும் அனைவரும் ஒன்று என சனாதனம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
படகுப் போக்குவரத்து தற்காலிக ரத்து:
கன்னியாகுமரியில் நிலையற்ற நீர் மட்டம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து ஏற்கனவே சென்ற சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப அனுப்பிவைக்கப்படுகின்றனர் விடுமுறை தினமான இன்று அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த நிலையில், படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராஜ்யசபா சீட் விவகாரம்:
"ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக கூறியது உண்மை. நேரம் வரும்போது அனைத்தையும் சொல்வேன்" என தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.
சாதனை மாணவி:
ஐஎஸ்சி (ISC) தேர்வில் 400க்கு 400 மதிப்பெண்கள் வாங்கி சாதனை படைத்த 12ஆம் வகுப்பு மாணவி, தனது சாதி பெயரை துறந்து சமூக மாற்றத்திற்கு வித்திட்டுள்ளார். மேற்குவங்கம் கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீஜனி பேசும் சமூகநீதி அனைவரையும் வியக்க வைக்கிறது.
ஆஸ்திரேலியா தேர்தல்:
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சியான தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலிய பிரதமராகிறார். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் 150 இடங்களில் 86 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற அல்பனீஸ்-க்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு த்ரில் வெற்றி:
இறுதிவரை விறுவிறுப்பான போன சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், 16 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. மேலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்குச் சென்றது.
கத்திரி வெயில்:
தமிழ்நாட்டில் கோடை காலத்தில் வெயிலானது வாட்டி வதைக்கும். இதனால், பகல் பொழுதில் வெளியே செல்வதே பெரும் சிரமமான காரியமாக இருக்கும். இந்நிலையில், வெப்பம் மேலும் அதிகரிக்கும் வானிலையான் கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.
மோகன்லால் திரைப்படம்:
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ள 'துடரும்’ தமிழில் 'தொடரும்’ என டப் செய்யப்பட்டு மே 9ல் வெளியாகிறது.





















