மேலும் அறிய
Advertisement
Top 10 News: காந்தி பிறந்தநாளில் தலைவர்கள் மரியாதை! 57 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை - இதுவரை இந்தியாவில்!
Top 10 News: நாடு முழுவதும் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- காந்தியின் 156வது பிறந்த நாள்; டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் மரியாதை
- காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை; ரூபாய் 57 ஆயிரத்தை நெருங்கி விற்பனையாவதால் பொதுமக்கள் வேதனை
- இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை
- இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்
- தமிழ்நாட்டில் இந்த மாத 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; சாலை மறியலில் ஈடுபட்ட 926 பேர் மீது வழக்குப்பதிவு
- இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்ப இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம்
- தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் – யானை, புலி, காட்டெருமைகள் உலாவுவதால் உற்சாகம்
- இன்று மகாளய அமாவாசை நீர்நிலைகளில் காலை முதலே புனித நீராடிய பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதிய பக்தர்கள்
- மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட கோவையில் பிரம்மாண்ட தாண்டியா நிகழ்ச்சி
- ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு
- மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து நீடித்து வரும் மோதல் போக்கு கவலை அளிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டரஸ் வேதனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion