Top 10 News: மீனவர்களுக்கு திடீர் தடை, ரூ.700 கோடி இழப்பு, ஸ்டாலின் நெகிழ்ச்சி - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
100 வயதை கடந்த நல்லகண்ணு அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். நான் இங்கு வாழ்த்த வரவில்லை. வாழ்த்து பெற வந்துள்ளேன். கலைஞர் இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் இவருக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கினேன். கட்சிக்காகவே உழைத்தார். உழைத்த பணத்தை எல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் முதமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூ.10 கோடி வருவாய் - அமைச்சர் சேகர் பாபு
"திருக்கோயிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தை எவ்வளவு பேர் எதிர்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மூன்றரை ஆண்டில், இத்திட்டம் மூலம் திருக்கோயில்களுக்கு சுமார் ₹10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அவதூறு பரப்பியவர்கள் கூட, தற்போது பாராட்டி வருகின்றனர்” - அமைச்சர் சேகர் பாபு பேட்டி
ராமதாஸை சந்திக்கிறார் அன்புமணி
பாமக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த வாக்குவாதம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை 11 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை, அன்புமணி சந்தித்துப் பேச உள்ளார்.
மீனவர்களுக்கு தடை
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி 60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை - மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் உத்தரவு
கோனேரு ஹம்பி அசத்தல்
அமெரிக்காவில் நடைபெற்ற உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில், இந்தேனேசிய வீராங்கனை ஜரீன் சுகந்தரை வீழ்த்தி இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்.
மலையாள சினிமாவுக்கு 2024 ஆண்டு பெரும் இழப்பு!
2024-ல் மலையாள சினிமாவுக்கு ரூ.700 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தகவல். இந்த ஆண்டு வெளியான 199 திரைப்படங்களில், 26 திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வியாபாரம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படங்களின் தயாரிப்பு செலவு ரூ.1000 கோடி ஆன நிலையில், இவை ஈட்டிய லாபம் வெறும் ரூ.350 கோடி தான் என குறிப்பிடப்பட்டுள்ளது
விமான விபத்து - 179 பேர் பலி?
தென் கொரியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயர்வு. விமானத்தில் இருந்த 181 பேரில், 179 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லேண்டிங் கியர் செயலிழந்ததால், விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மன்னிப்பு கேட்ட அதிபர் புதின்
அஜர்பைஜானில் ஏர்லைன்ஸ் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கி 38 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவிடம் ரஷ்ய அதிபர் புதின் மன்னிப்பு கேட்டார். அந்த நேரத்தில், க்ரோஸ்னி விமான நிலையம் அருகே உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை வீழ்த்துவதற்கு ரஷ்யா பதில் தாக்குதல் நடத்தியதாக அதிபர் அலுவலகம் தகவல். தாக்குதலுக்கு வெளிப்படையாக பொறுப்பேற்கவில்லை
பும்ரா சாதனை
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி, டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற கபிதேவின் (50 போட்டிகள்) சாதனையை பும்ரா (44 போட்டிகள்) தகர்த்தார்.
இறுதிக்கட்டத்தை நெருங்கிய WTC தொடர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு | முதல் அணியாக தென்னாப்பிரிக்கா முன்னேறுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 121 ரன்கள் அடித்து வெற்றி பெற்றால் WTC இறுதிப்போட்டிக்கு தென்னாப்ரிக்கா முதல்முறையாக செல்லும். BGT மற்றும் AUS vs SL தொடரை பொறுத்து 2வது அணி முடிவாகலாம்