மேலும் அறிய
Advertisement
Top 10 News: ஹரியானா முதலமைச்சர் பதவியேற்பு! அ.தி.மு.க. உதயமான நாள் கொண்டாட்டம் - இதுவரை நடந்தது!
Top 10 News: காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- ஹரியானா முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் நயாப் சிங் சைனி – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
- பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து- பௌத்தர்கள் கொண்டாட்டம்; சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
- தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்ற ஹெலிகாப்டர் உத்தரகாண்டில் அவசரமாக தரையிறக்கம்
- இந்திய தூதர்கள் பற்றிய குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூட்டோ ஒப்புதல்
- மீண்டும் தன்னை டெல்லியின் முதலமைச்சராக தேர்வு செய்யும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
- மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு – ஜூலை 1ம் தேதி முதல் அமல்
- கோதுமை, பார்லி, கடுகு உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு – குவிண்டாலுக்கு ரூபாய் 1850ல் இருந்து ரூபாய் 1980 ஆக உயர்வு
- சென்னையை அச்சுறுத்திய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது; ரெட் அலர்ட் வாபசால் இயல்பு நிலைக்குத் திரும்பிய சென்னை
- தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- சென்னையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் மழை பெய்யாதது ஏன்? வானிலை மையம் விளக்கம்
- சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மழைநீர் சேமிப்புக்காக வெட்டப்படும் புதிய குளங்களை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர்
- மழை காரணமாக சென்னையில் இன்றும் அம்மா உணவகங்களில் இலவச உணவுகள் விநியோகம்
- அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 53 ஆண்டுகள் ஆகியதை கொண்டாடும் விதமாக அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
- தி.மு.க. அரசும். ஆளுநரும் புதுக்காதலர்கள் போல இணக்கமாக உள்ளனர் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
- பிரபல நிறுவனமான பூர்வீகா மொபைல் நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
- மதுரையில் வைகை ஆற்றில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் தீவிரம்
- சிவகாசி அருகே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூபாய் 1 லட்சத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்
- நெல்லையில் நாட்டுத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் காரில் உலா வந்த பிரபல ரவுடி கண்ணபிரான் 15 பேர் கைது
- புரட்டாசி மாத கடைசி பெளர்ணமி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion