Top 10 News: விண்வெளியில் இந்தியா மகத்தான சாதனை, பும்ரா கொடுத்த விளக்கம் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
காணும் பொங்கலை ஒட்டி அலங்காநல்லூர் ஜல்லிக்ம்கட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. வாடி வாசலில் இருந்து சீறி வரும் காளைகளை, வீரர்கள் தங்களது அபார திறனை வெளிப்படுத்தி அடக்கி வருகின்றனர். பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். துணைமுதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னையில் பாதுகாப்பு
இன்று காணும் பொங்கல் என்பதால் மின்சார ரயில்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு. செங்கல்பட்டு - கடற்கரை, அரக்கோணம் - சென்ட்ரல், கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் மின்சார ரயில் வழித்தடங்களில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு. சென்னையில் உள்ள சுற்றுலாத்தலங்கள், பொழுதுபோக்கிடங்களுக்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
சுற்றுலா தளங்களில் குவிந்த பொதுமக்கள்
காணும் பொங்கலை ஒட்டி பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களில் குவிந்து வருகின்றனர். இதனால், கடற்கரைகள், நீர்வீழ்ச்சி போன்ற நீர்நிலைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், மலைப்பிரதேசங்கள் போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
ரூ.59 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை
சென்னையில் மீண்டும் ஆபரண தங்கத்தின் விலை 59 ஆயிரத்தை கடந்தது. அதன்படி, ஒரு சவரன் விலை 400 ரூபாய் உயர்ந்து, 59 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை 50 ரூபாய் அதிகரித்து, 7 ஆயிரத்து 390 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ செயற்கைக்கோள்கள் இணைப்பு - இந்தியா சாதனை!
PSLV C60 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட SpaDeX திட்டத்தின் 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு. அமெரிக்க, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து ஸ்பேஸ் டோக்கிங் முறையை வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டிய 4வது நாடு என்ற சாதனையை படைத்தது இந்தியா
நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திகுத்து!
மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மீது மர்ம நபர் வீடு புகுந்து கத்திகுத்து. காயமடைந்த சயிஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதி. இச்சம்பவம் குறித்து அவரது இல்லத்தில் மும்பை போலீஸ் விசாரணை
தேர்தல் அலுவலர் கணக்கில் பாஜக போஸ்ட்
டெல்லி தேர்தல் அலுவலரின் அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் பாஜக குறித்த செய்தி Repost செய்யப்பட்டதால் பரபரப்பு. இது தவறுதலாக பகிரப்பட்டுவிட்டதாகவும், X பக்கத்தை நிர்வகிக்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் விளக்கம்
ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் நிரந்தரமாக மூடல்
அதானி குழுமம் மீது தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான Hindenberg Research-ஐ நிரந்தரமாக மூடுவதாக அதன் நிறுவனர் ஆண்டர்சன் அறிவிப்பு. கடந்த 2023ல் இருந்து அதானி நிறுவனங்களை குறிவைத்து ஹிண்டன்பெர்க் வெளியிடப்பட்ட அறிக்கைகளால் அதானி குழுமம் பல பில்லியன் டாலர்களை இழந்து, பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது!
காஸாவில் போர் நிறுத்தம்:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகள் இடையே காஸாவில், கடந்த 15 மாதங்களாக நடந்து வந்த போரை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்தார் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக பிணைக்கைதிகளை விடுவிக்கவும், இருதரப்பும் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பும்ரா கொடுத்த விளக்கம்
பார்டர் கவாஸ்கர் தொடரில் காயமடைந்தால் இந்திய வீரர் பும்ரா, 6 மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என வதந்திகள் வெளியானது. இந்நிலையில், பும்ரா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “"போலிச் செய்திகளைப் பரப்புவது எளிது என்று எனக்குத் தெரியும், ஆனால் இது என்னை சிரிக்க வைத்தது நம்ப முடியாத ஆதாரங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.