(Source: ECI/ABP News/ABP Majha)
Todays News Headlines: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு...உத்தரபிரதேசத்தில் இன்று தேர்தல்...இன்னும் பல..!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* தமிழ்நாட்டில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
* நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு
* ஆளுநரை கேள்வி கேட்கக் கூடாதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்ப்பியுள்ளார்.
* என் கை, மண்வெட்டி பிடித்த கை; நான் மிகவும் கரடுமுரடானவன் - பிரச்சாரத்தில் இபிஎஸ் பேச்சு
* கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு - உயர்நீதிமன்றம் உத்தரவு
* நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் - கரூர் பரப்புரை கூட்டத்தில் உதயநிதி உறுதி
* சென்னை தி.நகரில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
இந்தியா:
* உத்தரப் பிரதேச சட்டமன்ற பொதுத்தேர்தலில் முதற்கட்டமாக இன்று 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
* கர்நாடாகாவில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கு: 3 நீதிபதிகள் அடங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்கின்றது.
* இந்த ஆண்டும் தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டணங்களை உயர்த்த ஏர்டெல் திட்டம்; 4 மாதங்களுக்குள் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிப்பு
* விவசாய கடன்கள் தள்ளுபடி, கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் உத்தரப்பிரதேச காங்கிரஸ் வாக்குறுதி
உலகம்:
* நிலவுப்பயணத்துக்கு ஆயத்தமாகும் நாசா: வீரர்களை பயமுறுத்தும் நீச்சல் குளத்தினுள் இறக்கி பயிற்சி
* அண்டை நாட்டில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் - ஐ.நா.வில் இந்தியா புகார்
* பாகிஸ்தானில் ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த கொடூரம்
* ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன என்று ஐ.நா.எச்சரிக்கை
விளையாட்டு:
* அகமதாபாத்தில் நடந்த போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவை வெற்றி பெற்றது இந்தியா. தொடரையும் வென்றது.
* “எனது சொந்த ஊர் சென்னை”- சிஎஸ்கேவுக்காக விளையாடுவது குறித்து மனம் திறந்த தினேஷ் கார்த்திக்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்