மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: கத்திரி வெயில் தொடங்கியது... இன்று தொடங்குகிறது பிளஸ் 2 தேர்வு.. இன்னும் பல முக்கிய செய்திகள்..
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்குகிறது : 8. 37 லட்ச மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர்.
- கத்திரி வெயில் தொடங்கியது : வானிலை ஆய்வு மையம் தகவல்
- 1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் வரை தேர்வு நாளில் மட்டும் வந்தால் போதும் : கடும் வெயில் காரணமாக தமிழ்நாடு அரசு புதிய முடிவு
- குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற ஆளுநர் மூலம் நீட் விலக்கு மசோதா மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பு : முதலமைச்சர் முக ஸ்டாலின் தகவல்
- விசாரணைக்கு அழைக்கபடும் நபர்களை காவல்துறையினர் துன்புறுத்தக்கூடாது : உயர்நீதிமன்றம் அறிவுரை
- திமுகவை ஆன்மிகத்திற்கு எதிரான கட்சி என சித்தரிக்க முயற்சி; நெருக்கடிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் : முதலமைச்சர் முக ஸ்டாலின்
- வட்டியுடன் வருமான வரி செலுத்திய நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு தொடர்ந்தது ஏன்? வருமான வரித்துறைக்கு : உயர்நீதிமன்றம் கண்டனம்
இந்தியா:
- ரெப்கோ வட்டி திடீர் உயர்வு; வீடு, வாகன கடன் வட்டி உயரும் : சிறப்பு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி முடிவு
- அரசியல் சாசன விதிக்கு உட்பட்டு பேரறிவாளனை நாங்களே விடுதலை செய்ய நேரிடும் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 5 நாள் கெடு
- ராஜஸ்தானில் கொலைக்கான ஆதாரங்கள் அனைத்தையும் பையோடு குரங்கு தூக்கிச் சென்றதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்ததால் அதிர்ச்சி.
- இந்தி தேசிய மொழி என்று கூறுவது தவறு : 'ரோஜா' பட புகழ் நடிகை மதுபாலா ட்விட்டரில் கருத்து
உலகம்:
- தாய்லாந்தில் ஷாப்பிங் மால் வாசலில் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நத்தை ஓடுகள் கண்டுபிடிப்பு
- அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்துவந்த கைலியா என்ற 16 வயது பிரபல மீம் டெம்பிளேட் குழந்தை தற்கொலை
- உலகின் மிக உயரமானப் பெண்மணி என்று கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ருமேயா கெல்கி மேலும் 3 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
விளையாட்டு :
- சென்னை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
- மும்பை பாந்த்ராவில் 10.5 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பரமான புதிய அபார்ட்மெண்ட்டை வாங்குகிறார் இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா
- இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி - ஹைதரபாத் அணிகள் நேருக்கு நேர் மோத இருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion