மேலும் அறிய
Advertisement
Today's Headlines: நடிகர் சங்க தேர்தல் முடிவுகள்... சென்னையில் இன்று நம்ம ஊரு திருவிழா.. பல முக்கியச் செய்திகள்
தமிழ்நாட்டின் வேளாண் துறை பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.
தமிழ்நாடு:
- நடிகர் சங்க தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. இதில், பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது. பொது செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்திக் வெற்றி
- சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற உள்ள நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி இன்று தொடங்க உள்ளது.
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுக சாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் இன்று ஆஜராவதாக தகவல்
- திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசம்
இந்தியா:
- கோவிட்ஷீல்ட் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவேளியை 8 முதல் 12 வாரங்களாக குறைக்கலாம் என மத்திய அரசுக்கு தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை
- உக்ரைனில் மரணமடைந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது
- இந்திராவில் எலெக்ட்ரிக் வாகனம் உற்பத்தி செய்யும் பணி சார்பாக ஜப்பான் நிறுவனமான சுசுகி 10,444 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய இருக்கிறது.
- தென் கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆசானி புயல் உருவாக வாய்ப்பு என வானிமை ஆய்வு மையம் அறிக்கை
உலகம்:
- உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு ஸ்பெயினில் கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
- உக்ரைனில் நடந்து வரும் போர் சூழலால் கிட்டத்தட்ட 1 கோடி பேர் வெளியேறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
விளையாட்டு:
- பஹ்ரைன் கிராண்ட் ப்ரீ கார் பந்தயத்தில் ஃபெர்ராரி வீரர் லெக்ரக் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்
- கேரளா - ஹைதராபாத் அணிகள் மோதிய ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 1-1 கோல் அடித்தனர். அதனை அடுத்து நடந்த பெனால்டி சூட் அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion