மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: தமிழ்நாட்டில் அதிகரித்த வெப்பநிலை... காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி...இன்னும் பல!
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சனையை போக்க 40 ஏரிகளை மேம்படுத்த திட்டம் தயார் : அதிகாரிகள் தகவல்
- கோயில் நிலங்கள், கட்டிடங்களில் வாடகை பாக்கி இருந்த பொருட்கள் ஏலம் : அறநிலையத்துறை தகவல்
- தமிழ்நாட்டில் 100 கீழ் குறைந்த கொரோனா தொற்று : 3 நாட்களாக உயிரிழப்பு இல்லை
- தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
- ஏப்ரல் 2ம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி பயணம் : திமுக அலுவலகத்தை திறந்து வைக்க இருப்பதாக தகவல்
இந்தியா :
- காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார் : டெல்லியில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு
- உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் : வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று துவக்கம் : முக்கிய பிரச்சனைகளை குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் முடிவு
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3, 116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
- இந்தியாவின் காலநிலை இலக்குகளை அடைவதற்கும், பசுமை மாற்றத்திற்கும் முதலீடாக ஆண்டுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர் தேவை : டைலீகல் (Trilegal) நிறுவனம் ஆய்வு
உலகம் :
- உலகின் தலைசிறந்த துப்பாக்கிச்சூடு வீரராகக் கருதப்படும் ‘வாலி’ உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
- உக்ரைன் போரில் பத்திரிக்கையாளரும், ஆவணப்பட இயக்குநருமான ப்ரெண்ட் கொல்லப்பட்டதாக தகவல்
- உக்ரைனில் லிவிங் நகரில் உள்ள ராணுவ தளத்தில் மீது ரஷ்யா வான்வெளி தாக்குதல் : 35 பேர் உயிரிழப்பு
விளையாட்டு :
- பெங்களூரில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 447 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- உலகிலேயே அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ படைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion