மேலும் அறிய

Todays News Headlines: தேர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு.. கும்பகோணம் புதுமணத்தம்பதி கொலை.. முக்கிய செய்திகள்

இன்றைய தினத்திற்கான முக்கியச் செய்திகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்..

தமிழ்நாடு:

  • 23ம் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு ஓபிஎஸ், இபிஎஸ் 
    ஆலோசனை.
  • தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய தேர் திருவிழாவில், தேர் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு. மூவர் படுகாயம்.
  • தர்மபுரி அருகே தேர் விபத்தில் உயிரிழந்த மனோகரன், சரவணன் அக்கியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000  வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
  • சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி மரணமடைந்தது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு. மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பாஸ்கரன் உத்தரவு.
  • தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திருத்தத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

க்ரைம்:

  • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் இரண்டு பேர் வெட்டிக் கொலை. பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்.
  • கூகுள் பேவில் பணம் பெற்றுக் கொண்டு கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர்கள் கூண்டோடு கைது.
  • சென்னையில் ஹார்டுவேர்ஸ் கடை ஊழியர் ரவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் காவலர் செந்தில் குமார் நீதிமன்றத்தில் சரண்.

இந்தியா:

  • 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த 2022 ஏப்ரலில் 7.79% ஆக இருந்த நாட்டின் பணவீக்கம் மே மாதம் 7.04% ஆகக் குறைந்தது.
  • ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தல்.
  • நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் குறித்து டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரானார்.
  • காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் ஆணையம் மேற்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.

விளையாட்டு:

  • இந்தியாவில் ஐபிஎல் தொடரை தொலைகாட்சியில் ஒளிபரப்பும் உரிமையை ரூ.23,575 கோடிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரும், டிஜிட்டல் உரிமையை ரூ.20,500 கோடிக்கு ஜியோவின் வயாகாம் நிறுவனமும் பெற்றுள்ளன.
  • ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியின்போது  இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு.
  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விசாகப்பட்டிணத்தில் நடைபெறும் 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது.
  • 38 அணிகள் பங்கேற்ற 87வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்குகின்றன. 

உலகம்:

  • இலங்கை மின்சாரசபை தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாவி செய்தார்.
  • உலகிலேயே நீண்ட காலம் அரசப் பணியில் இருந்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சாதனை
  • ''லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு இந்தியாவே காரணம்,'' என, சீன ராணுவ அமைச்சர் வீ பெங்கி குற்றச்சாட்டு
  • பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து, வாரத்துக்கு குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் இவற்றை விற்கும் நடைமுறையை அமல்படுத்த இலங்கை முடிவு.

சினிமா:

  • போதைப்பொருள் உட்கொண்டதாக பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் பெங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • பத்ரி நாராயணன் இயக்கத்தில் சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள “பட்டாம்பூச்சி” திரைப்படம் ஜூன் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பு.
  • நடிகர் விவேக் நினைவாக பச்சாபாளையத்தில் ஒரு ஏக்கரில் 'பீ ஹேப்பி' வனம் என்ற பூங்கா அமைக்கப்படுகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget