மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: முதலமைச்சர் டெல்லி பயணம்..பீகார் அமைச்சரவை விரிவாக்கம்..இன்னும் பல செய்திகள்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் செய்கிறார்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்.
- பொறியியல் பிரிவிற்கான தரவரிசைப் பட்டியலில் இன்று வெளியாகிறது.
- மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் 3 பாஜக பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை.
- தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பாதிப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சிதம்பரம் அருகே மாரியம்மன் ஆலையத்தில் ஆடி திருவிழா நடைபெற்றது.
- காரைக்காலில் நடைபெற்ற திருவிழாவில் கலாச்சார நடனங்கள் இடம்பெற்றன.
இந்தியா:
- உயர்நீதிமன்றங்களுக்கு 35 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- கண்டெய்னர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
- குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு வழங்கிய தேநீர் விருந்தில் பிரதமர், துணைக் குடியரசு
- பீகார் மாநில அமைச்சரவை இன்று காலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
- கடன் வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி இன்று முதல் உயர்த்துகிறது.
- ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் 2 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
- அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 2 புதிய எஸ்யூவி கார்கள் அறிமுகம் செய்யப்படும் என்று டெக் மஹிந்திரா அறிவிப்பு.
- கர்நாடகாவின் சிவமோகா பகுதியில் மோதல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகம்:
- இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு இன்று சீனா உளவுக் கப்பல் வர உள்ளது.
- எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை
- கென்யா நாட்டின் புதிய வில்லிய மூடோ தேர்வாகியுள்ளார்.
- நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்க ரஷ்யா தயாராக இருக்கிறது என்று அதிபர் புடின்
- மடகாஸ்கர் நாட்டிற்கு இந்தியா 15 ஆயிரம் சைக்கிள்களை வழங்கியுள்ளது.
- சீனாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா செனட் சபை உறுப்பினர்கள் தைவான் வந்ததால் அங்கு கடற்பகுதியில் சீனா போர் ஒத்திகை செய்தது.
- நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- வங்கதேசத்தின் சவுக் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விளையாட்டு:
- ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பாதுகாக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஐயான் செப்பல் வர்ணனையிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
- சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion