மேலும் அறிய

Todays News Headlines: 7.5% இடஒதுக்கீடு தீர்ப்பு... சீனாவில் அதிகரிக்கும் கொரோனா... சில முக்கியச் செய்திகள்!

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

தமிழ்நாடு:

  • மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்றும் நடைபெறுகிறது.
  • மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். 
  • மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 
  • அதிமுக கட்சியின் அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்மாதம் 19ஆம் தேதி மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் என தகவல்.
  • சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல். 
  • கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
  • அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரை கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை என்று மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் எச்சரிக்கை.

இந்தியா:

  • நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 
  • மும்பையில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக வெளியான செய்து தவறு என்று மும்பை மாநகராட்சி விளக்கம். 
  • குற்றவியல் நடைமுறைகள் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 
  • காஷ்மீரி பண்டிட்டுகளிடமிருந்து கட்டாயமாக பறிக்கப்பட்ட சொத்துகள் மீண்டும் ஒப்படைக்கப்படும்.
  • ஜே.இ.இ மெயின் தேர்வு தற்போது ஒத்துவைக்கப்பட்டுள்ளது.
  • 4ஜி சேவைக்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்கள் நிறுவ பிஎஸ்.என்.எல் திட்டம்.

உலகம்:

  • ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்திலிருந்து ரஷ்யாவை நீக்க நடவடிக்கை.
  • இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. 
  • இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்‌ஷே விலக மாட்டார் என நாடாளுமன்றத்தில் அறிவிப்பு.
  • இலங்கையில் மக்களுடன் சேர்ந்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக 40 ஆயிரம் படுக்கைகளுடன் ஷாங்காயில் சிறப்பு மருத்துவமனை அமைப்பு. 
  • எத்தியோப்பியாவை வாட்டி எடுக்கும் கடும் வறட்சி காரணமாக 70 லட்சம் பேர் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
  • ஸ்பெயின் கார் கண்காட்சியில் பழமை வாய்ந்த கார்களின் அணிவகுப்பு கண்ணை கவரும் வகையில் அமைந்திருந்தது.

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. 
  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Embed widget