மேலும் அறிய
Advertisement
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Nattu kozhi pannai subsidy: நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில்முனைவோர் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முக்கிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2024-25ம் ஆண்டில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்தல், அதற்கான தகுதிகள் என்னென்ன, தெரிந்து கொள்வோம்.
கால்நடை பராமரிப்புத்துறை 2024-25ம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில்முனைவோர் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முக்கிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது.
- மேற்காணும் திட்டம் 2024-25 ஆம் ஆண்டில் அனைத்து (சென்னை நீங்கலாக) மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
- நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் (ரூ.1,56,875) மாநில அரசால் வழங்கப்படும் .
- திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.
- ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.
- பயனாளிகளிடம் கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
- மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2023-24ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளோ அவர்தம் குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக் கூடாது.
- கட்டுமானப்பணிகள், தீவனம் (ம) உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்தின்கீழ், நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும் ஆர்வமும் உள்ள 3 முதல் 6 தொழில் முனைவோர் / பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பிக்கும் பயனாளிகளிடமிருந்து ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம் ) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022- 23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் பெறப்படவேண்டும்.
- திட்டத்தின் விவரங்கள் குறித்து உள்ளூர் செய்தித்தாள்களில் கால்நடை நிறுவனங்கள், உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகங்கள் போன்றவற்றில் பரந்த விளம்பரம் செய்யப்பட வேண்டும்.
- குறைந்தபட்ச இலக்கான 3 தகுதி வாய்ந்த பயனாளிகளை ஜூலை-15-க்குள் தேர்வு செய்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று பயனாளிகளின் தகுதி உறுதி செய்யும் ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
- மாவட்டங்களிலிருந்து பெறப்படும் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளின் பட்டியலிலிருந்து, முன்னுரிமை அடிப்படையில் 100 பயனாளிகள், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் அவர்களால் இறுதி செய்யப்படும் .
பொதுமக்கள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion