மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: நகைக்கடன் தள்ளுபடி.. திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்..இன்றைய முக்கியச் செய்திகள்
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக இங்கே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.4.805 கோடி அளவிலான 97% நகைக்கடன் தள்ளுபடி : அமைச்சர் பெரியசாமி தகவல்
- எந்தவித சச்சரவுகளுக்கும் இடமில்லாமல் பொதுத்தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து நடத்தி முடிக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
- பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்
- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவுப்பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு
- எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு : தமிழக அரசின் பதில் மனு
- மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவுள்ள நுழைவுத்தேர்வை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கடிதம்
- தமிழ்நாட்டில் சீமைக்கருவை மரங்களை அகற்றுதல் குறித்து இறுதி கொள்கை அறிவிக்க இரண்டு மாத அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா :
- ஹெச்.டி.எஃப்.சி. இவெஸ்மெண்ச் லிமிடட் ( HDFC Investments Limited) மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஹோல்டிங்ஸ் ( HDFC Holdings Limited) ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்படும் என்றும் ஹெச்.டி.எஃப்.சி குழுமம் அறிவிப்பு
- நடிகர் நாக பாபுவின் மகளும், மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகள் நிஹாரிகா கொனிடேலா போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
- செவிலியர்களுக்கான சமூகவியல் பாடப்புத்தகம் அதன் ஒரு அத்தியாயத்தில் வரதட்சணையின் சிறப்புகளை பட்டியலிட்டதால் சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாநில அரசுகளின் இலவச திட்டங்களால் இலங்கையின் அவலநிலை இந்தியாவுக்கு ஏற்படலாம் : பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
- தமிழ்நாட்டில் 3 மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரை திரும்ப பெற வேண்டும் : நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
உலகம் :
- இலங்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா
- உக்ரைன் தலைநகரான கீவிற்கு அருகில் 410 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்தோனேசியாவில் 13 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - ஆசிரியருக்குத் தூக்கு
விளையாட்டு :
- மும்பையில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி லக்னோ அணியிடம் போராடி தோல்வியை தழுவியது.
- ஐபிஎல் தொடர் : இன்றைய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான்- பெங்களூர் அணிக்கு நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion