மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்... 8 வகுப்பு வரை இன்று விடுமுறை.. இன்னும் பல!
Today's News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு ஆகியவற்றில் நடைபெற்ற முக்கியச் செய்திகளை காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் பொது இடத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
- தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- மரக்காணம் கலவர வழக்கில் பாமகவினர் 20 பேரும் விடுதலை: திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு
- அமைச்சர் நேரு தம்பி கொலை வழக்கில் குற்றவாளியை நெருங்குகிறது போலீஸ்: துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு
- 1 முதல் 8 வகுப்பு வரை இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் வருகிற மே 8 ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்
இந்தியா :
- இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான நிலைப்பாடு இந்திய தயாரிப்புகளுக்கான சந்தையை இழக்க வழிவகுக்கும் : முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை
- டெல்லியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்: மாநில அரசு
- இந்தியாவில் ஒரேநாளில் 2, 451 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
- டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ், திடீரென துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு
உலகம் :
- ரஷ்ய படைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவிப்பு
- 3 வாரங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த சீனாவில் வரும் செவ்வாய்க்கிழமை வரை ஊரடங்கு நீட்டிப்பு
- உக்ரைனின் மறுகட்டமைப்புகளுக்காக கூடுதலாக 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்வதாக ஜெர்மனி பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் தகவல்
- பிரேசில் நாட்டில் குழந்தை ஒன்று இரண்டு ஆண் உறுப்புடன் பிறந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு :
- டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
- ஒரே ஐபிஎல் தொடரில் அதிகமான சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் பட்லர் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion