மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: சென்னை அருகே மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி.. போரிஸ் ஜான்சன் பயணம்.. இன்னும் சில முக்கிய செய்திகள்
Today's News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு ஆகியவற்றில் நடைபெற்ற முக்கியச் செய்திகளை காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம் : சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
- அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தல் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை : தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
- திருநங்கையருக்கு ரூ.1000 மாத உதவித்தொகை வழங்க வேண்டும் : உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
- பால் பொருட்களை நெகிழி பைகளுக்கு பதில் முன்பு போல பாட்டிலில் ஏன் விற்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
- ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி அடிக்க சென்ற மாணவர்கள் சஸ்பெண்ட்
- 10, 11, 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு
இந்தியா :
- 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ?: மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை
- எப்போதும் தேசத்திற்கு முன்னுரிமை தாருங்கள் : அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
- பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் 'பான் மசாலா' விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். ‘புகையிலை பொருட்களின் விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்' என்று தெரிவித்தார்.
- மின்னணு இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விரைவில் வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
உலகம் :
- ஆப்கானிஸ்தானில் மசூதியில் உள்ளே நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுற்றுப்பயணம் அமெரிக்க எம்பிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்
- உக்ரைன் நாட்டின் உள்ள மரியுபோலை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு
- இந்தியா- ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் மே 1 ம் தேதி அமலுக்கு வருகிறது.
விளையாட்டு :
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஐபிஎல் தொடரில் ஆடம் மில்னேவுக்கு மாற்றாக, இலங்கையைச் சேர்ந்த இளம் பௌலரான மதீஷா பதிரானாவைக் களமிறக்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
- இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி - ராஜஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion