மேலும் அறிய

Headlines Today Tamil: புத்தாண்டுக்கு தடை...பெட்ரோல் விலை குறைப்பு...70 ரூபாயில் மதுபானம்..இன்றைய டாப் நியூஸ்..!

Headlines Today in Tamil, 29 Dec: காலை முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

* தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு மற்றும் ஆங்கில புத்தாண்டு அன்று கொண்டாட தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது.

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்

* சென்னையில் கடந்த சில நாட்களாகவே அன்றாட கொரோனா பதிவு அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், தடுப்பூசி செலுத்தாதோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அறிவுறுத்தியுள்ளார்.

* 2026-ஆம் ஆண்டு  சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம் என சென்னையில் நடைபெற்ற பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சபதமேற்கப்பட்டிருக்கிறது.

* கடந்த 6 வருடமாக ஆன்மீக பயிற்சியை கொடுத்து வருவதாகவும், தான் சாமியார் இல்லை என்றும்  அன்னபூரணி அரசு அம்மா கூறினார். இறுதியில் சத்தியம்தான் ஜெயிக்கும், தர்மத்தை நிலைநாட்டுவேன் என்றும் கூறினார்.

* வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை நிரந்தரமாக சரி செய்ய தமிழ்நாட்டுக்கு 6,230 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

*  கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவிப்பு.

இந்தியா:

* ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

* புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், மதுபான விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

* தங்களுக்கு வாக்களித்தால் 70 ரூபாயில் தரமான மதுபானம் கொடுக்கப்படும் என ஆந்திர பாரதிய ஜனதா தலைவர் சோமு வீரராஜூ கூறியது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

* மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்ட கலெக்டர் கரம்வீர் சர்மா, மக்கள் அளித்த புகார்கள் தொடர்பாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் தனது சம்பளத்தை தானே 'கட்' செய்துள்ளார்.

உலகம்:

* ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள் தங்கள் விண்வெளி நிலையத்தை மோத வந்ததாக சீனா புகார்.

* சூடானில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விளையாட்டு:

* இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எட்டியிருக்கிறார் முகமது ஷமி.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget