Headlines Today Tamil: இன்று 5000-ஐ தாண்டும் கொரோனா... பிரதமரின் பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு.. இன்றைய டாப் நியூஸ்!
Headlines Today in Tamil, 06 Jan: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
* 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.
* தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 5000-ஐ தாண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
* மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
* ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் வாங்க சொன்னதாக பிரேமலதா விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து
* பல்கலை. துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் அதிரடி
* ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
* நீட் தேர்வு ரத்திற்கு அதிமுக என்றும் துணை நிற்கும் - அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம்
இந்தியா:
* இத்தாலியிலிருந்து இந்தியா வந்த ஒரு விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
* மன்கீ பாத் நிகழ்ச்சியை வானொலியில் கேட்போர் எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்
* ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் அவசரம் ஏன்? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
* பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகளப்பு விதிமீறல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பஞ்சாப் அரசு விசாரணை குழு அமைத்துள்ளது.
உலகம்:
* அமெரிக்க அணு ஆயுத கப்பலான யு.எஸ்.எஸ். ஆபிரஹாம் லிங்கனுக்கு பெண் கேப்டன் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* பிரிட்டனில் கொரோனா பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் 28 நாட்கள் கோமாவில் இருந்ததற்கு பிறகு, மருத்துவர்கள் கொடுத்த ‘வயாகரா’ மருந்தால் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
விளையாட்டு:
* மழை காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2 ஆவது டெஸ்ட் நான்காவது நாளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
* மகளிர் உலகக்கோப்பை தொடருக்கு மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்