மேலும் அறிய

மழை எச்சரிக்கை முதல்... உச்சம் தொட்ட பெட்ரோல் விலை வரை: இன்றைய முக்கியச் செய்திகள்

வானிலை ஆய்வு மையம் விடுத்த மழை எச்சரிக்கை முதல்... உச்சம் தொட்ட பெட்ரோல் விலை வரை இன்றைய முக்கியச் செய்திகள் என்னவெனப் பார்க்கலாம்.

 அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்
தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி சேலம் திருவண்ணாமலை கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களுக்கு நாளை முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல்

செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. 
வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றது. 

சரிந்தது சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு
சமூக வலைதள சேவைகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூன்றுமே தொழில்நுட்ப கோளாற்றால் நேற்று இரவு செயலிழந்தன. ஐந்து மணிநேரத்துக்கும் மேல் தடைப்பட்ட இந்த சேவைகளால் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு  7 பில்லியன் டாலர் அளவில் சரிந்திருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

முதல்வர் தனிப்பிரிவில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இயற்பியல் துறைக்கான நோபல் அறிவிப்பு

2021ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு சுயுகுரோ மனாபே, க்ளாஸ் ஹாசெல்மென் மற்றும் ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூவருக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம்- சென்னை உயர்நீதிமன்றம்

 நீலகிரியில் தேடப்பட்டு வரும் T23 புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின்வேலியில் சிக்கி கணவன், மனைவி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட  மின்வேலியில் சிக்கி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

உச்சம் தொடும் எரிபொருட்களின் விலை

7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108 ரூபாயைத் தாண்டியது.

சத்தீஸ்கர் முதல்வர் விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா

லக்கிம்பூர் வன்முறை குறித்து நேரில் பார்வையிட சென்ற சத்தீஸ்கர் முதல்வருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து லக்னோ விமான நிலையத்திலேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

பருவநிலை மாற்றத்தால் 14% பவளப்பாறைகள் அழிவு

பருவநிலை மாற்றத்தால் 10 ஆண்டுகளில் 14% பவளப்பாறைகள் அழிந்துள்ளதாக  ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.  புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பவளப்பாறைகள் முழுவதுமாக அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த வருடமும் ஐபிஎல்-க்கு வரும் தோனி

தன்னுடைய கடைசி ஐ.பி.எல். போட்டியை சென்னையில் ரசிகர்கள் காணலாம் என்று நம்புவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் தோனி. இதன் மூலம் அடுத்த வருடமும் தான் நிச்சயம் ஐபிஎல்க்கு வருவேன் என அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget