
Breaking News Live | ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கு ஒமிக்ரான்..! இந்தியாவில் பாதிப்பு 21 ஆக அதிகரிப்பு...!
Breaking News Live Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள்..!
LIVE

Background
ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கு ஒமைக்ரான்..! இந்தியாவில் பாதிப்பு 21 ஆக அதிகரிப்பு...!
ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா - ரஷ்யா இடையே நாளை இருதரப்புப் பேச்சுவார்த்தை
இந்தியா - ரஷ்யா இடையே நாளை முதல்முதலாக இருதரப்புப் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ஆசிய - பசிஃபிக் சூழல், இரு நாடுகளுக்கு இடையேயான மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
மஹாராஷ்ட்ராவில் மேலும் 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி..
மஹாராஷ்ட்ராவில் மேலும் 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மதுரை விமான நிலையம் வந்திறங்கிய ஒருவருக்கு கொரோனா தொற்று.. ஓமைக்ரான் பாதிப்பா?
மதுரை விமான நிலையம் வந்திறங்கிய ஒருவருக்கு கொரோனா தொற்று.. ஓமைக்ரான் பாதிப்பா? என்னும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை
டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி - தொற்று பாதிப்பு 5 ஆக உயர்வு
டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தான்சானியா நாட்டில் இருந்து டெல்லி திரும்பிய நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமிக்ரான் உறுதியானது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

