மேலும் அறிய
Advertisement
News Headlines : சென்னை திடீர் கனமழை... இந்தியா வெற்றி... சிறுவன் கவலைக்கிடம்... இன்னும் பல!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற, பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னையில் நேற்று தொடர்ச்சியாக கனமழை பெய்தது. மிகக் குறைவான நேரத்தில் பல்வேறு பகுதிகளில் 200 மிமீ மழை பெய்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
- இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை எனும் நூலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆளுநரின் அதிகாரத்தை திமுக அரசு மறுவரையறை செய்யவேண்டும்! மாநில சுயாட்சியை வலுவாக்கும் மஹாராஷ்டிரா சட்டத்திருத்தத்திற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
- சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு, மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
- புதுக்கோட்டை பசுமலைப்பட்டி காவல்துறை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில், பயிற்சி மேற்கொண்ட சி.ஐ.எஸ்.எஃப் படையினரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு, அருகிலுள்ள நார்த்தாமலை கிராமத்தில் புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் பாய்ந்தது.
சென்னை மழை பாதிப்பு குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் நள்ளிரவு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் pic.twitter.com/uSuKL6o1XU
— Sivaraman PK 🖤 சிவராமன் கர்ணன் (@Sivaraman_PK) December 30, 2021
இந்தியா:
- நடப்பு நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
- மாநில நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நடத்தினார்
- பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளில் 01.01.2022 முதல் 10.01.2022 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இந்தத் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- மின்னணு முறையில் நாமினேஷன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நீட்டித்தது.
உலகம்:
- உலகின் பல பகுதிகளிலும் ஒமிக்கிரான் ரக கோவிட் வைரஸுடன் இதற்கு முன்பு தீவிரமாக இருந்த டெல்டா ரக வைரஸூம் சேர்ந்தே பரவி வருவதால் அது மிகப்பெரும் சவாலாக உருவெடுத்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு:
இந்திய – தென்னாப்ரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion