Headlines Today Tamil | கரீனாவுக்கு ஒமிக்ரானா..? செருப்பை காட்டிய சீமான் மீது புகார்..பிரதமர் வருகை.. இன்றைய டாப் நியூஸ்..
Headlines Today in Tamil, 18 Dec: காலை முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
![Headlines Today Tamil | கரீனாவுக்கு ஒமிக்ரானா..? செருப்பை காட்டிய சீமான் மீது புகார்..பிரதமர் வருகை.. இன்றைய டாப் நியூஸ்.. Today News Headlines Tamil Nadu, India 18 Dec Top News Today evening headlines Breaking news in Tamil Headlines Today Tamil | கரீனாவுக்கு ஒமிக்ரானா..? செருப்பை காட்டிய சீமான் மீது புகார்..பிரதமர் வருகை.. இன்றைய டாப் நியூஸ்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/2aadd490de008b5209ebae7a3a4a3c9d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு:
* வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் ராஜேந்திரபாலாஜியை போலீசார் தேடி வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
* திமுகவினரை மேடையில் செருப்பை காட்டி மிரட்டியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
* ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யவேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
* பங்காரு அடிகளாரை சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்
* ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டும்தான் அனுமதிக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி தகவல்..!
* பிரதமர் தமிழகம் வருகை - 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்கிறார்
* ‛இனி கழிப்பறைகளைத்தான் முதலில் பார்ப்பேன்...’ -அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
இந்தியா:
* கரீனா கபூருக்கு ஒமிக்ரான் தொற்றா? மரபணு வரிசை செய்ய முடிவு
* அகிலேஷ் யாதவ் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
* குட்டி குரங்கை கொன்ற நாய்கள்.. பழிவாங்குவதற்காக சுமார் 250 நாய்க்குட்டிகளை கொன்ற குரங்குகள்.. என்ன நடக்கிறது பீட் மாவட்டத்தில்?
உலகம்:
* செவ்வாயில் மறை நீர்; நெதர்லாந்து நாட்டைவிட பெரிய பள்ளத்தாக்கு.. வெளியான ஆச்சர்யம்..
* பாகிஸ்தானில் பாதாள சாக்கடை கால்வாயில் எரிவாயு தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு
* டாக்காவில் புனரமைக்கப்பட்ட காளி கோயிலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
* மெக்சிகோவில் பிரபல நடிகை டானியா மெண்டோசா மர்ம நபர்களால் சுட்டுக்கொலை.
விளையாட்டு:
* தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக ராகுல் நியமனம் - பிசிசிஐ
* ரங்கன் வாத்தியாரைப் பாராட்டிய அஸ்வின்.. ரிக்கி பாண்ட்டிங்கை புகழ காரணம் என்ன?
* “வெற்றிக்கனல் இன்னும் என்னுள் எரிந்துகொண்டு இருக்கிறது” - புதிய ஐபிஎல் அணிக்கு ஆலோசகரான கம்பீர் ட்வீட்
* பாசிசத்தை கடைபிடிக்கிறதா பிசிசிஐ? அப்போ கபில், சச்சின், கங்குலி… இப்போ கோலி!
* ஆஷஸ் தொடரில் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 282 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)