மேலும் அறிய
Advertisement
Today Headlines : மியான்மரில் தமிழர்கள் சிக்கித்தவிப்பு.. இந்திய மகளிர் அணி வெற்றி.. இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- பட்டியலின பள்ளி குழந்தைகளிடம் பாகுபாடு - திண்பண்டம் தர மறுத்த 5 பேரும் 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை: நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்களை இந்தியா அமைத்து வர நடவடிக்கை : பிரதமருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்
- சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து ஆயுத பூஜைக்கு 5,800 பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கற் தகவல்
- அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்: பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் எடப்பாடி பழனிசாமி
- ஆம்னி பஸ் கட்டணம் விலை நிர்ணயம் செய்து பட்டியலை வெளியிட்டது ஆம்னி சங்கம்
- நாட்டிலேயே முதல் முறையாக கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது
- தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கிறது : மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் தகவல்
இந்தியா:
- உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் வழக்கு விசாரணைகள் நேரலையில் ஒளிபரப்பு: வரும் 27ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிப்பு
- காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல்: அசோக் கெலாட், சசி தரூர் இடையே கடும் போட்டி
- சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 1 கோடியே 2 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.
- சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர், தலித்திய, பெண்ணுரிமைச் செயற்பாட்டாளருமான மீனா கந்தசாமிக்கு, ஜெர்மன் நாட்டின் ‘Penn' அமைப்பின் உயரிய விருதான 'ஹெர்மன் கெஸ்டன்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைந்து வந்த நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அது 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
உலகம்:
- தாய்லாந்தில் ஐடி வேலை இருப்பதாக ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட 300 இந்தியர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டு அங்கு கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
- பல்வேறு ஈரானிய அரசின் இணையதளங்கள் மற்றும் அதன் கீழ் வரும் ஊடக இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக உக்ரைனில் ரஷ்ய மக்களை குடியேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு:
- ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது
- ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி தகவல் வெளியிட்டுள்ளது.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தானா மகளிர் கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion