மேலும் அறிய
Advertisement
Headlines Today : நாளை முதல் வடகிழக்கு பருவமழை.. இந்திய அணி வெற்றி.. மேலும் முக்கிய செய்திகள் இதோ..
Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே விரிவாக காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது; கோயிலுக்குள் தனி நபர்கள் யாகம் பூஜை நடத்த அனுமதிக்க கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- பணிமனை ஓய்வறையில் டிரைவர், கண்டக்டர், தொழிலாளர்கள் புகை பிடிக்க, மது குடிக்க கூடாது : போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை
- சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் முழு உருவச்சிலையை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் : 4ம் தேதி பலத்த மழை - வானிலை மையம் தகவல்
- வெடிகுண்டு தயாரிக்க திட்டம் : கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் - போலீஸ் காவலில் 5 பேரிடம் விசாரணை தீவிரம்
- இலங்கை கடற்படை அட்டூழியம் : ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு
- தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு; இந்திய கடற்படை அதிகாரிகள் நாகை துறைமுகத்தில் ஆய்வு : விசைப்படகில் 47 குண்டுகள் பாய்ந்த துளைகள்
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் குறித்து விளக்கும் வகையில் நவம்பர் 4ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
- பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேராமல் இடைநின்ற மாணவர்களுக்காகத் தமிழக அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் மூலம் இன்று (அக்.28) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்தியா:
- 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ அலுவலகம் : உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் அமைத் ஷா தகவல்
- தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி; 4 எம்.எல்.ஏவிடம் பாஜக தலா ரூ.100 கோடி பேரம் - சாமியார் உட்பட 3 பேர் கைது
- டெல்லியை நோக்கி பறந்த ஆகாசா ஏர் விமானம் பறவை மோதி சேதமடைந்ததாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரிகள் தகவல்
- மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வாயு கசிவு : இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேரை மருத்துவமனையில் அனுமதி
- பெண்களை "ஐட்டம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்தால் அதுவும் பாலியல் துன்புறுத்தல்தான் என்று மும்பை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
- ஏர்பஸ் (Airbus) மற்றும் டாடா (Tata) நிறுவனங்கள் இணைந்து குஜராத் மாநிலத்தில் விமான உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளது.
உலகம்:
- சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டியான சிங்க் ஒன்றை சுமந்து சென்றார் பிசினஸ் மேக்னட்டான எலான் மஸ்க்.
- இலங்கையில் கடந்த 9 மாதங்களில் 429 பேர் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கம் பகிர்ந்துள்ளது.
- விண்வெளியில் உள்ள பைத்தான் என்னும் சிறுகோள் பூமியை நோக்கி வேகமாக வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
- பாலியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இங்கிலாந்தின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளையாட்டு:
- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
- ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்தியா-நெதர்லாந்து இடையிலான ஆட்டத்தில் இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சிவக்குமார் என்ற சச்சின் சிவாவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion