மேலும் அறிய
Headlines Today : சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..! பிரதமரான ரிஷி சுனக்..! ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி..! இன்னும் பல
Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே விரிவாக காணலாம்.
தமிழ்நாடு :
- தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் பணி இடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு திரும்புவோர்களால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
- வெளியூர் செல்ல முன்பதிவு செய்யாதவர்கள் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்த அவலம்
- கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவம் : 5 பேர் மீது பாய்ந்தது உபா சட்டம்
- கோவை கார் வெடித்து சிதறிய சம்பவம் : கைதானவர்களில் ஒருவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் மகன் – விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
- சென்னையில் விதிமீறி பட்டாசு வெடித்த 271 பேர் மீது வழக்குப்பதிவு
- தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அபராதம் இன்று முதல் அமல்
- கோவை சம்பவம் : என்.ஐ.ஏ. விசாரணை கோரி அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்
- சென்னையில் 3 நாட்களில் மட்டும் 211 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு
- கோவையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுடன் இன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
இந்தியா :
- இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தெரிந்த பகுதி நேர சூரிய கிரகணம்
- கோவில்கள் நடை சாத்தப்பட்டு கிரகணம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன
- காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் மல்லிகார்ஜூனா கார்கே
- உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் உத்தரவு
உலகம் :
- பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பு
- டவ் ஷாம்புகளில் புற்றுநோய் பரவும் அபாயம் அதிகளவில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் – திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு
- வங்காளதேசத்தில் சிட்ரங் புயலால் பெரும் பாதிப்பு – 35 பேர் உயிரிழப்பு
- உலகின் அழுக்கான மனிதர் 94 வயதில் காலமானார் : 50 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்த சூழலில் குளித்த 1 மாதத்தில் உயிரிழப்பு
விளையாட்டு :
- டி20 உலககோப்பையில் இலங்கையை எளிதாக வென்றது ஆஸ்திரேலியா
- ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தல்
- உலககோப்பையில் இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து – அயர்லாந்து, நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் மோதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion