மேலும் அறிய
Advertisement
Headlines Today : களைகட்டும் தீபாவளி பண்டிகை..! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! இந்தியா திரில் வெற்றி..! இன்னும் பல..
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
- தீபாவளிக்கு அதிக ஒளி எழுப்பும் பட்டாசுகளி வெடிக்க வேண்டாம் - மா. சுப்பிரமணியம் வேண்டுகோள்
- மழைநீர் வடிகால் கட்டுமானத்தில் விழுந்து உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு
- கோவை மாவட்டத்தில் உக்கடம் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு - காவல்துறையினர் விசாரணை
- விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 6,673 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
- தமிழ்நாடு முழுவதும் 25ம் தேதி (நாளை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், கொரோனா தொற்று காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி
- இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் : அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
இந்தியா:
- வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்ற விவகாரம் : ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
- இன்று காலை 11 மணிக்குள் ராஜினாமா செய்யுங்கள் : 9 துணைவேந்தர்களுக்கு கேரள ஆளுநர் கெடு
- சந்திராயன் 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜீன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் சோமநாத்
- கர்நாடக மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண்ணை, கோபத்தில் கர்நாடக அமைச்சர் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
- மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 சுவாமி சிலைகள் திருடப்பட்ட வழக்கு : தமிழக காவல்துறையின் உதவியை நாட உள்ளதாக மகாராஷ்டிரா காவல்துறை தகவல்
உலகம்:
- இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக, ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு:
- முன்னாள் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்துள்ளார்.
-
டி20 உலகக் கோப்பை போட்டியில் கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது இந்தியா
- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion