மேலும் அறிய
Advertisement
Today Headlines: ரயிலில் தள்ளி கொலைசெய்த இளைஞர் கைது.. ஹிஜாப் விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.. இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- சென்னை பரங்கிமலை கல்லூரி மாணவியை ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞர் நள்ளிரவில் கைது.
- நளினி உள்ளிட்ட 5 பேர் விடுதலை கோரிய வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் : நீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுப்படுவோமென தமிழ்நாடு அரசு பதில்
- எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்காமான காண்ட்ராக்டர் ரூ.2000 கோடி சொத்து குவித்தது அம்பலம் : புதுக்கோட்டை வீட்டில் 2வது நாளாக ரெய்டு
- பள்ளிக்கல்வி துறையில் தேர்வு செய்யப்பட்ட 2,849 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை : வழங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின்
- காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300-க்கு கீழ் குறைந்துள்ளது.
- பிரதமர் மோடி தமிழகம் வரும் தகவல் எங்கிருந்து பரவியதென்றே தெரியவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- சென்னை விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தியா:
- ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் 3வது நீதிபதி விசாரிப்பார்.
- கேரளா நரப்பலி விவகாரம்: மேலும் 26 பெண்கல் நரபலியா..? போலீசார் தீவிர விசாரணை
- நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்பி சசி தரூர் நியமனம்
- பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கான கடைசித் தேதியை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் நகரில் பயங்தரவாதிகளுடனான மோதலின்போது படுகாயம் அடைந்த ராணுவ நாயுக்கு சிகிக்கை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உயிரிழந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தகவல்
- நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்யும் வகையிலான இந்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், ஆதார் பயன்பாடு என இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - ஐஎம்எஃப் புகழாரம்
- மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு பேரணியில் அண்ணா, கலைஞர், முக ஸ்டாலின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தனர்.
உலகம்:
- உக்ரைனின் 4 பகுதிகள் இணைப்பு : ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் - இந்தியா உள்பட 35 நாடுகள் புறக்கணிப்பு
- பாகிஸ்தானில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்
- கடல் எல்லையை பகிர்ந்து கொள்வதில் இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து கொள்வதற்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்
- காமிக்ஸ் புத்தகமாக வெளியானது “எலிசபெத்’ மகாராணியின் வாழ்க்கை.
விளையாட்டு:
- ஆசிய கோப்பை மகளிர் டி20 போட்டி : 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
- மல்யுத்த வீரர் சாகர் கொலை வழக்கு.. ஒலிம்பிக்ஸில் வென்ற சுஷில் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.
- எந்த பதவிக்கும் முடிவு காலம் உண்டு என சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion