மேலும் அறிய
Advertisement
Headlines Today : சென்னையில் விடிய, விடிய கொட்டிய மழை..! குஜராத் விபத்தில் 142 பேர் உயிரிழப்பு.. மேலும் முக்கிய செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை
- சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
- சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான சாலைகளில் ஆறாக மழைநீர் ஓடியது
- ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
- மழைநீர் தேங்கிய பகுதிகளில் இரவில் சென்னை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 4-ந் தேதி வரை கனமழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- வடகிழக்கு பருவமழை : அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை
- உளளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று நகரசபை கூட்டம்
- தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்க பாடத்திட்டம் மொழிபெயர்ப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- திருச்செந்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவில் திருக்கல்யாண வைபோகம்
- தமிழ்நாட்டில் வரும் 6-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியது காவல்துறை – உத்தரவு அமல்படுத்தப்பட்டதா? என அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
- ஆர்.எஸ்.எஸ். பேரணி நடக்கும் தினத்தன்று மனுஸ்மிருதிகளை இலவசமாக விநியோகிக்க திட்டம்
- பத்திரிகையாளர்கள் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோர அண்ணாமலை மறுப்பு
இந்தியா :
- குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 142 ஆக உயர்வு
- பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களிடம் இருவிரல் பரிசோதனை நடத்தக்கூடாது – சுகாதாரத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயம் பரிசோதனை முறையில் இன்று அறிமுகம்
- நாடு முழுவதும் 9 வங்கிகளில் டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்தலாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த இடத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு
உலகம் :
- விண்வெளியில் தனி ஆய்வுக்கூடம் அமைக்கும் முயற்சி – வெற்றிகரமாக இரண்டாவது ஆய்வுக்கூடத்தை விண்ணில் செலுத்திய சீனா
விளையாட்டு :
- டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி : சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
- உலககோப்பை சூப்பர் 12 : ஆப்கானிஸ்தான் - இலங்கை, நியூசிலாந்து - இங்கிலாந்து மோதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion