Today Headlines : வெற்றியுடன் தொடங்கிய இந்தியா.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்.. - இன்றைய தலைப்புச் செய்திகள்!
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு
1.செஸ் ஒலிம்பியாட்: முதல் நாளில் இந்தியாவுக்கு முழுமையான வெற்றி; ஓபன், மகளிர் பிரிவுகளில் இந்தியாவின் 6 அணிகளும் வெற்றி
2.கள்ளக்குறிச்சி கலவரம் - கைது எண்ணிக்கை 322 ஆக உயர்வு
3.சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம் மூலம் கோரிக்கை
4. பகுத்தறிவு பாதையில் சென்றால்தான் பட்டத்திற்கு பெருமை : அண்ணா பல்கலைகழகபட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு
5.இளைஞர்களின் வெற்றியே இந்தியாவின் வெற்றி: அண்ணா. பல்கலைகழகபட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு
6.கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்பிப்பு - சமூக ஊடகங்கள் மீதான நடவடிக்கையை காவல்துறை முடிவெடுக்கலாம் என நீதிபதி உத்தரவு
7.தமிழக கல்வி வளர்ச்சிக்கு மத்திய அரசின் உதவிகள் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை
சினிமா
1.இன்று தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீடு
2.விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
3.செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: அறிமுகப் பாடலை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
4.எனது ரசிகர்கள்தான் எனது ஆதரவின் தூண்கள் - பிறந்தநாளில் வாழ்த்தியவர்களுக்கு நன்றி சொன்ன தனுஷ்
5.வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங் பணிகள் முழுவதும் முடிந்துவிட்டது - நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு
உலகம்.
1.தைவானை சீனா சொந்தம் கொண்டாடக்கூடாது என அமெரிக்க அதிபர் பைடன் கூறியதற்கு நெருப்போடு விளையாட வேண்டாம் என்று சீன அதிபர் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்.
2.ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு: 4 பேர் காயம் என தகவல்
இந்தியா
1.உக்ரைன் மற்றும் சீன மருத்துவ கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்த இந்திய மாணவர்கள் எப்எம்ஜி தேர்வு எழுத அனுமதி - உச்சநீதிமன்றம் உத்தரவு
2.குடியரசுத் தலைவர் குறித்த சர்ச்சை பேச்சு: கடிதம் மூலம் மன்னிப்பு கேட்டார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
விளையாட்டு
1.தொடங்கியது காமன்வெல்த் போட்டிகள்; 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
2.காமன்வெல்த் டேபிள் டென்னிசில் இந்தியா வெற்றி, நீச்சலில் இந்திய வீரர் குஷக்ரா ராவத் தோல்வி
3. குத்துச்சண்டையில் இந்திய வீரர் ஷிவ தாபா இராண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்