மேலும் அறிய
Advertisement
Today Headlines 11th June 2023: அரசியல் முதல் விளையாட்டு வரை.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? - 7 மணி தலைப்புச்செய்திகள் இதோ..!
Headlines News: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா - பாஜகவினர் உற்சாக வரவேற்பு
- அமித்ஷா வருகையின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக பாஜகவினர் சாலை மறியல் - கடும் போக்குவரத்து நெரிசல்
- உயர்மின்னழுத்த பாதையில் ஏற்பட்ட கோளாறு தான் அமித்ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட காரணம் - மின்சார வாரிய தலைவர் விளக்கம்
- 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு செய்தது என்ன? - உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தான் அமித்ஷா தமிழ்நாட்டு வருகிறார் - சேலம் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
- பாஜகவை கண்டு முதலமைச்சருக்கு பயம் வந்து விட்டது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
- தருமபுர ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த பட்டணப்பிரவேசம் - பல்லக்கில் வீதியுலா வந்த ஆதீனத்திடம் ஆசி பெற்ற மக்கள்
- தருமபுர ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நிகழ்வில் பல்லக்கு வீதியுலாவுக்கு எதிர்ப்பு - விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
- நாடு முழுவதும் பொது மருத்துவ கலந்தாய்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடர தமிழக அரசு முடிவு
- நாளை பள்ளிகள் திறப்பு - பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
இந்தியா:
- அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு
- ஒடிஷா ரயில் விபத்துக்கும் இண்டர்லாக்கிங் அமைப்பு மூடப்பட்டதே காரணம் - சிபிஐ விசாரணையில் தகவல்
- திருப்பதி அருகே கார்களில் செம்மரக்கட்டைகள் கடத்தியதாக தமிழர்கள் உட்பட 8 பேர் கைது
- தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 2 செயல் தலைவர்கள் நியமனம் - தலைவர் பதவியில் இருந்து விலகும் சரத்பவாரின் விருப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் முடிவு
- கடல்சார் திறனை பிரதிபலிக்கும் வகையில் இந்திய கடற்படை சார்பில் அரபிக்கடலில் நடைபெற்ற பிரம்மாண்ட போர் பயிற்சி
- கர்நாடகாவில் இன்று முதல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல் - முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.
- ஹஜ் புனித பயணமாக 5 நாடுகள் வழியாக 8,640 கி.மீ. தூரத்தை நடந்து சென்று மெக்காவை அடைந்த கேரள வாலிபர்
உலகம்:
- துருக்கி கப்பலை கடத்த முயற்சி - ஆயுதமேந்திய கும்பலின் தாக்குதலை முறியடித்த இத்தாலி சிறப்பு படையினர்
- சோமாலியாவில் விளையாட்டு மைதானத்தில் குண்டு வெடித்து 27 சிறுவர்கள் பரிதாபமாக பலி
- அமேசான் காட்டிற்குள் நிகழ்ந்த விமான விபத்து - ராணுவ வீரர்கள் நடத்திய 40 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டையில் கைக்குழந்தை, 3 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
- வடகொரியாவில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள் - தற்கொலை செய்ய தடை விதித்து அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவு
- கஜகஸ்தானில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 14 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற 444 ரன்கள் இலக்கு - கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது
- ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய வெஸ்ட்இண்டீஸ் அணி
- பாவோ நூர்மி போட்டியில் இருந்து ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விலக முடிவு
- உலக, ஆசிய போட்டிகளுக்கு தமிழக வாள்வீச்சு வீராங்கனைகள் பவானி தேவி, ஜெனிஷா தேர்வு
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion