மேலும் அறிய
Advertisement
Headlines Today : பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு.. வெளுக்கும் மழை.. இன்னும் முக்கியச் செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு :
- குடிப்போதையில் சிக்கியவர்கள் அபராதம் செலுத்தாவிட்டால் 14 வது நாளில் வாகனம் ஏலம் விடப்படும் : வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை
- கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- பள்ளி, ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டும் முன்பு வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
- கோவையில் கார் வெடித்து உயிரிழந்த முபின் வீட்டில் ஐஎஸ் அமைப்பின் கொடி, ஆவணங்கள் சிக்கியது
- தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு : தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் 2, 048 பேர் தயார் - அமைச்சர் தகவல்
- தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜசோழனின் 1,037வது சதய விழா கோலாகலம் :ராஜ வீதிகளில் திருமுறை திருவீதி உலா
- உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வர வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
- பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு மூத்த பேராசிரியர்கள் பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்தக் கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியா:
- குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது ; நாளை வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம், டிசம்பர் 8 ம் தேதி வாக்கு எண்ணிக்கை
- ஊழல் செய்பச்வர்களை எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் விடக் கூடாது - அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை
- தெலங்கானா மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, தன்னை தானே சாட்டையால் அடித்தும் கொள்ளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- 85 நகரங்களில் 100 சதவீத வீட்டு குடிநீர் இணைப்பு - ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பாராட்டு
- டெல்லியில் காற்றின் தரம் உயரும் வரை பள்ளிகளை மூடலாம் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், பாஜகவும் வலியுறுத்தியுள்ளன.
உலகம்:
- பணவீக்கத்தை கட்டுப்படுத்த 30 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்தில் வட்டி உயர்வு : அமெரிக்காவிலும் அதிகரிப்பு
- பாகிஸ்தானில் பேரணி நடத்தி வரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு
- ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்ததா வட கொரியா? ஐ.நா. விதிமீறல் என வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு
விளையாட்டு:
- உலகக் கோப்பை தொடரில் 36ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும் மோதியது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
- ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனை நந்திதா தங்கம் வென்று அசத்தினார்.
- ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார்.
- ஐசிசி மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர் விருது - விராட் கோலி, தீப்தி ஷர்மா பெயர்கள் பரிந்துரை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion