மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நடப்பு செய்திகள் நாள்தோறும்... சட்டென அறிய.. இதோ ஏபிபி-யின் தலைப்பு செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ்நாடு ஊழல் பட்டியல் வெளியாகும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- இந்திய மீனவர்கள் 16 பேரையும் அவர்களது படகுகளையும் மீட்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- 2024-ஆம் ஆண்டில் வடமாநிலங்களுக்கும் சேர்த்தே விடியல் வரும் என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
- ஜாதி, மத கலவரத்தை தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி - முதலமைச்சர் முக ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
- வதந்தி பரப்புகிறார்கள் யாரும் நம்ப வேண்டாம் என வடமாநில தொழிலாளர்களை சந்தித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள்
- பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறதா அதிமுக: நாளை முக்கிய முடிவு
- தருமபுரி அருகே மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழப்ப் - விவசாயி அதிரடி கைது
- தமிழ்நாட்டில் வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை அறிவிக்கப்படும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் உலக மகளிர் நாள் வாழ்த்து செய்தியில் உறுதி
- லம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. பீகார் அரசு சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் - பீகார் அதிகாரிகள் குழு
இந்தியா:
- தனியார் நிறுவனங்களும் முதலீட்டை அதிகரிக்க பிரதமர் மோடி அறிவிப்பு
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய Megha-Tropiques-1 (MT1) செயற்கைக்கோளை மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு கொண்டு வந்து அதனை அழிக்க திட்டமிட்டுள்ளது.
- டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ராஜினாமாக்களை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். புதிய அமைச்சர்களாக பரத்வாஜ், அதிஷி ஆகியோரை நியமனமும் செய்தார்.
- சட்டமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாகாலாந்து, மேகாலயாவில் புதிய முதலமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
- ரயில்வேயில் வேலை வழங்கிவிட்டு லஞ்சமாக நிலங்களைப் பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
உலகம்:
- அமெரிக்கா, தென்கொரியா மீது தாக்குதல் நடத்த தயார் : வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை
- இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
- இம்ரான் கான் மீதான கைது வாரண்ட் 13ம் தேதி வரை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- புதிய தொழில் நுட்ப உதவியுடன் மகளிர் மற்றும் சிறுமிகள் பலன் அடையும் வகையில் நவீன இந்தியா செயல்பட்டு வருகிறது என ஐ.நா.வில் இந்திய தூதர் பேசியுள்ளார்.
- அமெரிக்க கோர்ட்டில் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு:
- மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பெண்கள் தினத்தையொட்டி இன்று டிக்கெட் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வெஸ்ட்இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
- டெல்லி மற்றும் உத்தர பிரதேச அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் டெல்லி அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது.
- இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
- பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விளையாட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion