மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: ஒரு நிமிடத்தில் உங்கள் கைகளில் இன்றைய செய்திகள்.. ஏபிபியின் தமிழ் வணக்கம்..
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
- பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது பொதுச்செயலாளர் முடிவு அல்ல; தொண்டர்களின் முடிவு - எடப்பாடி பழனிசாமி பேச்சு
- தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
- கடலூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
- சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கையில் இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற தேவையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு
- போலி பட்டுப்புடவைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது -அமைச்சர் காந்தி
- மேட்டூர் அணையில் இன்னும் 5 அடி குறைந்தால் 24 மாவட்டத்திற்கு தண்ணீர் பிரச்சினை' - எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
- பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற இருந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- சாத்தனூர் அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இந்தியா:
- லேண்டர், ரோவரை மீண்டும், செயல்பட வைப்பது கடினம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
- கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு
- பீகாரில் பிற்படுத்தப்பட்டோர் 63%, பொதுப்பிரிவினர் 15% - ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரம் வெளியீடு
- மகாராஷ்ட்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மருந்துகள் பற்றாக்குறை காரணமாக பச்சிளங்குழந்தைகள் 12 பேர் உட்பட 24 பேர் உயிரிழப்பு
- ராஜஸ்தானில் வந்தே பாரத் ரயிலுக்கு ஏற்பட இருந்த கோர விபத்து, ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.
- உலக அளவில் சிறந்த விஸ்கியாக இந்தியாவின் இந்திரி விஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- ”ராஜஸ்தான் மாநிலத்தையே காங்கிரஸ் அழித்துவிட்டது” - அசோக் கெலாட் அரசை சாடிய பிரதமர் மோடி
உலகம்:
- பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் உள்ள டெஃபி (Tefe) ஏரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட டால்பின் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மெக்ஸ்கோவில் தேவாலய மேற்கூரை இடிந்து 10 பேர் உயிரிழப்பு - 60க்கு மேற்பட்டவர்கள் படுகாயம்
- ஜிம்பாப்வேயில் நடுவானில் விமானம் வெடித்து இந்தியர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு.
- கனடாவில் மக்களின் கருத்து சுதந்திரத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி - எலான் மஸ்க் குற்றச்சாட்டு.
விளையாட்டு:
- உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா - நெதர்லாந்து இன்று மோதல்.
- ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் இந்தியா - நேபாளம் இன்று மோதல்.
- ஆசிய விளையாட்டு தொடரில் 13 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் இந்தியா பதக்கம் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
- உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.
- ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ. தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த ஆரத்தி கஸ்தூரி ராஜ், ஹீரல், சஞ்சனா, கார்த்திகா ஆகியோ அடங்கிய குழு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion