மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்றைய செய்தி தொகுப்பு.. இன்றைய முக்கிய குறிப்பு... உங்களுக்காக காலை தலைப்பு செய்திகள் இதோ!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- குன்னூர் அருகே 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
- பொதுமக்கள் அனைவரும் மனமுவந்து ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
- தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை; 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- இன்று முதல் வருகிறது அமல்; வந்தே பாரத் ரயிலுக்காக வைகை நேரத்தில் திடீர் மாற்றம் - பயணிகள் அதிர்ச்சி
- 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
- கோடம்பாக்கம், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று ஒரு நாள் மட்டும் காலை 11 மணி முதல் 3:15 மணி வரை நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- புதுச்சேரி துணைநிலை ஆளுநராக உள்ள தமிழிசைக்கு கன்னியாகுமரியில் தேர்தலில் நின்று எப்படியாவது எம் பி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது - அமைச்சர் பொன்முடி
- ராகுல், பிரியங்கா காந்தி குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவு செய்த தமிழக பாஜக ஐ.டி.விங் பொறுப்பாளர் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
- மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது, அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
இந்தியா:
- தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக குறித்த பிறகு அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் அண்ணாமலை - நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட அனுமதி கேட்க இருப்பதாக தகவல்
- காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொலையால் மோதல் தீவிரம் கனடாவுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் பேச்சு
- சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம் 9.2 லட்சம் கி.மீ. தூரம் பயணம் - இஸ்ரோ தகவல்
- செப்டம்பர் 30 காலகெடு முடிந்ததால் ரூ. 2000 நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7 வரை அவகாசம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- "இந்திய அரசிடமிருந்து போதிய ஆதரவு இல்லை" - டெல்லியில் தூதரகத்தை மூடிய ஆப்கானிஸ்தான்
- அடுத்தாண்டு மக்களவை தேர்தலுக்காக போஸ்டர் ஒட்ட மாட்டேன் என்றும் காசு தர மாட்டேன் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உலகம்:
- துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடந்ததால் பரபரப்பு
- சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு லிபியா- இத்தாலி இடையே நேரடி விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கில் இம்ரான்கானை குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்.
- ஸ்பெயினில் இரவு நேர கேளிக்கை விடுதி தீப்பிடித்து 13 பேர் உயிரிழப்பு.
- இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை நடத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு:
- உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.
- ஆசிய விளையாட்டு போடியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் அரையிறுதிக்கு முன்னேறி ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்தார்.
- ஆசிய விளையாட்டு: பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்று அசத்தல்.
- இது எனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என தமிழக வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion