மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நொடிக்குநொடி உலகம் முழுவதும் பரபரப்பு.. நேற்றைய நாளில் நடந்தது என்ன? காலை தலைப்பு செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்:ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி
- தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு நடந்தது; 5,446 பதவிக்கு 55 ஆயிரம் பேர் போட்டி - வினாத்தாள் குளறுபடியால் தேர்வு தாமதம்
- விழுப்புரம் ஆசிரம விவகாரத்தில் கைதான 8 பேரை சிபிசிஐடி விசாரிக்கை அனுமதி : 3 நாள் காவலில் எடுத்து சென்றனர்.
- வேலூர் முள்ளு கத்திரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு
- சென்னையில் சில சாலையோர கடைகளில் மட்டன் பிடியாணியில் பூனைக்கறி கலந்து விற்பனை - நரிக்குறவர்களிடம் இருந்து 11 பூனைகள் பறிமுதல்
- ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
- 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை அளிக்கும் என்எம்எம்எஸ் தேர்வை நேற்று தமிழ்நாட்டில் 2.75 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
- இந்திய, இலங்கை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ. 18 லட்சம் ஊக்கத்தொகையை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
- 11, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் பிப்ரவரி 28 முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 28ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- பிரதமர் நரேந்திர மோடி நாட்டை சாதி அரசியல், வாரிசு அரசியலில் இருந்து காப்பாற்றியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெரிவித்துள்ளார்.
- பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடிவடைந்து விட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
- சிறுபான்மையினர், தலித்துகள், பெண்களை குறிவைத்து வெறுப்பு தீயை பரப்புகிறது பாஜக- காங்கிரஸ் மாநாட்டில் சோனியா ஆவேசம்
- ஜெர்மனி அதிபர் ஸ்கால்கடன் சந்திப்பு; ரஷ்யா-உக்ரைன் அமைதிக்கு இந்திய பங்களிக்க தயார் - பிரதமர் மோடி அறிவிப்பு
- பல்வேறு நவீன வசதிகளுடன் காட்பாடி ரயில் நிலையம் ரூ. 7 கோடியில் சீரமைக்கப்படும் - தெற்கு ரயில்வே தகவல்
- டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
உலகம்:
- பப்புவா நியூ கினியாவில் என்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.
- ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்க ‘ஜி7’ நாடுகளின் தலைவர்கள் முடிவு.
- ஆப்கானிஸ்தானின் பைசாபத்தில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- அமெரிக்காவில் உள்ள முதியவர்களை ஏமாற்றி பல கோடி மோசடி : இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 51 மாத சிறைத்தண்டனை.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் தயாராக இருப்பதாக அவரது மனைவி ஜில் பைடன் தெரிவித்துள்ளார்.
- கம்போடியாவில் 11 வயது சிறுமி ஒருவர் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
- dwarf galaxy எனப்படும் குள்ள விண்மீன் திரள்களில் இரண்டு பிரம்மாண்டமான கருந்துளைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது போல் தோற்றமளிக்கும் காட்சி நாசா பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு:
- மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
- இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 'ஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது தவறு' என்று கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.
- உ.பி.வாரியர்ஸ் அணியின் துணை கேப்டனாக ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா நேற்று நியமிக்கப்பட்டார்.
- நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வினோத் காம்ப்ளியின் 30 ஆண்டு கால சாதனையை, இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்ஸ் தகர்த்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion