மேலும் அறிய
Advertisement
Headlines: காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..! உங்களுக்காக இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
-
சென்னையில் வரலாறு காணாத வகையில் ஆபரண தங்கம் 44,000 ரூபாயை தாண்டியது. பட்ஜெட்டில் தங்கம் வெள்ளிக்கு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் கடும் விலை ஏற்றம்.
-
அதிமுக பொதுகுழுவில் மாற்றப்பட்ட விதிகளை இதுவரை ஏற்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில். ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் சிக்கல்.
- அதிமுக விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனு அதிர்ச்சியளிக்கிறது - விசிக தலைவர் திருமாவளவன்
- தொடர் மழை காரணமாக திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
-
மயிலாடுதுறையில் தொடர் கன மழையால் 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்.
- இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக யாரும் பார்க்கவில்லை. வளர்ந்த நாடாகவே பார்க்கின்றனர் - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு
- மக்கள நலத்திட்ட பணிகள் தொடர்பாக 4 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை தீவிரம், ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுகவினர் வாக்கு சேகரிப்பு
இந்தியா:
- அதானி குழுமம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்கட்சிகள் வலுயுறுத்தல், அமலி காரணமாக நேற்று நாள் முழுவதும் அவை முடங்கியது.
- தாதா சாகேப் பால்கே விருது பெற்ற கே.விஸ்வநாத் காலமானார். வயது முதிர்வு காரணமாக ஹைதரபாத் இல்லத்தில் உயிர் பிரிந்தது
- உலக பணக்காரர் பட்டியலில் 17வது இடத்திற்கு பின் தங்கினார் அதானி. சொத்து மதிப்பு 64 மில்லியன் டாலராக வீழ்ச்சி.
-
பட்ஜெட் தொடர்பாக எம்.பிக்களிடம் இன்று விளக்குகிறார் நிர்மலா சீதாராமன். மக்களவை மாநிலங்களவை பா.ஜ.க எம்.பி.க்களுக்கு அழைப்பு
-
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் இருச்சர வாகனம் மீது கார் மோதி விபத்து, அடியில் சிக்கிக்கொண்ட வாகனம் 4 கிமீ தூரம் இழுத்து செல்லப்பட்டது
- பீகாரில் சத்யாகிரக எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 பெட்டிகள் கழன்று தனியாக சென்ற விவகாரம். ரயில்வே அதிகாரிகள் விசாரணை
- ஜம்மு காஷ்மீரில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் பயங்கரவாதி கைது. பெர்ஃபியூம் வெடிகுண்டு பறிமுதல்.
- பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கக்கோரிய வழக்கு இன்று அவசர வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணை
உலகம்:
- உக்ரைன் மீது வரும் 24ம் தேதி மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டம். எல்லையில் 5 லட்சம் வீரர்களை ரஷ்யா குவித்துள்ளதாக உக்ரைன் குற்றச்சாட்டு.
- பாகிஸ்தான் பெஷாவரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய பயங்கரவாதி அடையாளம் கண்டுபிடிப்பு. சம்பவம் நடக்கும் சில நிமிடங்களுக்கு முன் சிசிடிவியில் பயங்கரவாதி உருவம் பதிவு.
விளையாட்டு:
- வரும் 13ஆம் தேதி மகளிர் ஐ.பி.எல்லுக்கான ஏலம் நடைபெறும் என தகவல்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion