மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் முதல் வெளிநாடு வரை.. கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- அரசின் திட்டங்களை குழந்தைகளை போல கவனித்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
- ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
- பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவிப்பு - இலங்கை ராணுவம் திட்டவட்ட மறுப்பு
- பிரபாகரன் உயிருடன் இருப்பதாக போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை - மக்களையும் மகனையும் பறிகொடுத்து விட்டு உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்க மாட்டார் என சீமான் கருத்து
- உதகை அருகே பழங்குடியின மக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறை தீவிரம் - 48 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை
- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை நடந்த 4 இடங்களில் பணிபுரிந்த 6 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் - வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நடவடிக்கை
- தொடர் கொள்ளையையடுத்து வங்கி அதிகாரிகளுடன் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை - ஏடிஎம்களில் ரகசிய கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தல்
- கோவையில் தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்ததன் 25வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு - அசம்பாவிதங்களில் தடுக்க முக்கிய இடங்களில் 3 ஆயிரம் போலீசார் குவிப்பு
- விழுப்புரம் அருகே ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்வதாக புகார் - 4 பேரை கைது செய்து 13 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு
- மதுரை - திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை பாதையில் ரயில் சோதனை ஓட்டம் - 120 கி.மீ. ரயில் இயக்கப்பட்டு தண்டவாள உறுதித்தன்மை பரிசோதனை
இந்தியா:
- பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி - வானில் வட்டமடித்து சாகசம் செய்த விமானங்கள்
- பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியில் அமெரிக்க போர் விமானங்கள் அறிமுகம் - வரும் 17 ஆம் தேதி வரை வானில் சாகசங்கள் நிகழ்த்துவதை காணலாம் என அறிவிப்பு
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு - மார்ச் 13 ஆம் தேதிக்கு அவை ஒத்திவைப்பு
- மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பயனாளர்களுக்கு நல்லது தான் - தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் கருத்து
- ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்பை கடந்த சில்லறை விலை பணவீக்கம் - ஜனவரி மாதத்தில் 6.52 சதவிகிதமாக அதிகரிப்பு
- இந்தியாவில் அதிகளவில் மாசடைந்த 131 நகரங்கள் கொண்ட பட்டியலில் சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தகவல்
- வங்கிகளை விட அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது - நாடாளுமன்றத்தில் மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் லால் சௌத்ரி விளக்கம்
- இந்தியாவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய முதல் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து - மும்பையில் நடப்பு வாரத்தில் அறிமுகம்
உலகம்:
- நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியது
- நியூசிலாந்தில் கேப்ரியல் புயலால் மிகப்பெரிய அளவில் வெள்ளச் சேதம் - தேசிய நிலையிலான அவசர நிலை பிரகடனம் பிறப்பிப்பு
- சைப்ரஸ் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் 51.9% வாக்குகளுடன் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் வெற்றி
விளையாட்டு:
- மகளிர் ஐபிஎல் ஏலம்: கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்ட வீராங்கனைகள் - அதிகப்பட்சமாக இந்திய வீராங்கனை மந்தனா ரூ.3.4 கோடிக்கு விலைக்கு ஏலம்
- சென்னை ஓபன் சேலஞ்ச் டென்னிஸ் தொடர்: தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் சுமித் நாகல், முகுந்த் சசிகுமார் வெற்றி
- துபாயில் ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம் - இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று கஜகஸ்தானுடன் மோதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion